SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

 

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம் எப்படி இருக்கும் என வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பராசக்தி மற்றும் சிபி சக்கரவர்த்தி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கின்றது. சிவகார்த்திகேயனின் 26 ஆவது படமாக தயாராகவிருக்கும் இப்படம் குறித்து இணையத்தில் பல தகவல்கள் சுற்றி திரிகின்றன. SK26 என அழைக்கப்படும் இப்படம் சைன்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என ஒருபக்கம் சொல்லப்படுகின்றது.

மேலும் சிவகார்த்திகேயனின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்றும் தகவல் வருகின்றன. இதுபோல இப்படம் தொடர்பாக பல தகவல்கள் வர இயக்குனரும் இசையமைப்பாளரும் மற்றும் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் இப்படத்தை பற்றி பேசியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கங்கை அமரனிடம் SK26 திரைப்படம் குறித்து கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கங்கை அமரன், சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபுவின் காம்போ சிறப்பாக இருக்கும். படத்தின் கதை அருமையா வந்துருக்கு, விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றார் கங்கை அமரன். இதன் மூலம் SK26 திரைப்படத்தின் மீதான ஹைப்பை கங்கை அமரன் மேலும் ஏற்றியிருக்கின்றார். ஏற்கனவே இப்படத்தின் மீது மாபெரும் அளவில் ஹைப் இருந்து வருகின்றது. தற்போது கங்கை அமரன் கூறியதற்கு பிறகு மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்கவுள்ளார்களாம். வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய விஜய்யின் GOAT மிகப்பெரிய வெற்றியை பெற்றது. என்னதான் கலவையான விமர்சனங்களை GOAT பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. குறிப்பாக விஜய்யின் வில்லனிஸம் படத்தில் ஹைலைட்டாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனின் படத்தை இயக்க இருக்கின்றார்.

GOAT என்ற பிரம்மாண்டமான படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன்படத்தை இயக்குவதால் கண்டிப்பாக இப்படத்தின் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் காரணமாக கண்டிப்பாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உயரும் என உறுதியாக சொல்லப்படுகின்றது.

மறுபக்கம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகின்றது. இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் அடுத்தகட்டத்துக்கு செல்வார் என்பது தான் அனைவரது நம்பிக்கையாகவும் உள்ளது. பராசக்தி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என்பதால் கண்டிப்பாக SK26 திரைப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். இப்படிப்பட்ட ஹைப்பிற்கு மத்தியில் உருவாகப்போகும் SK26 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக தான் ஒட்டுமொத்த சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

மிக விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கப்படும் என தெரிகின்றது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்திதிரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் தான் இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து