லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் DC. இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியான நிலையில் இப்படத்தின் மீது லோகேஷ் கனகராஜ் மாபெரும் அளவில் நம்பிக்கை வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று ஒரு வீடியோவின் மூலம் வெளியிடப்பட்டது. அருண் மாதீஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு DC என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை சன் நிறுவனம் தயாரித்து வருகின்றது. பத்து நாட்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் நேற்று தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியானது.
இந்த வீடியோவை பார்க்கும்போதே இப்படம் அதிரடியான ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிகின்றது. இதுவும் ஆக்ஷன் படமா ? என சில ரசிகர்கள் விமர்சனம் செய்தும் வருகின்றனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் DC திரைப்படம் மீது மாபெரும் அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறாராம். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாக தெரிகின்றது.