தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் 4; கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் […]
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்; ஆளுங்கட்சி தலையீடு?

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, அடுத்தாண்டு பிப்ரவரி, 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில், 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய தலைவராக, ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி உள்ளார். விருப்பம் தமிழ்குமரன், […]
ஊழல் என்பது ஒரு சாதாரண விடயம் என்ற நிலை இலங்கையில் மாற்றப்படவேண்டும்!

1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிக்கிறது என்று பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிரியர் ரமேஸ் ராமசாமி தெரிவித்தார். நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கண்டி ஶ்ரீ புஸ்பதான மண்டபத்தில் நடத்திய சிவில் அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத் அவர் இதனைத் தெரிவித்தார். நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நடத்தி வரும் கூட்டத் தொடரில் 251 வது கூட்டம் கண்டியில் இடம் […]
பிரதேச சபையில் பதற்றம்

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பாணந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தர்மசிறி பெரேரா தலைமையில் மற்றும் செயலாளர் நுவன் பெர்னாண்டோவின் பங்குபற்றுதலுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து

தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து இருந்தார். இவரது கருத்துக்களால் ஜப்பான்-சீனா உறவுகளில் விரிசல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. சீனா, கிழக்கு ஆசிய நாடான தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை ஒட்டிய கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக […]
அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா?

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து வரும் வேளையில், இதற்கு மாற்றாக மற்றொரு வரைவு தீர்மானத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலும், ஹமாசும் […]
68 வயதுடைய பெண் கொலை: விசாரணை ஆரம்பம்

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை கடந்த 14 ஆம் திகதி இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 ஆம் திகதி காலை பெண் கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்கள் அப்பகுதியை விட்டு […]
வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது தமது நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யூ. வூட்லர் அறிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதை பொலிஸ் அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது சட்டவிரோதமானது என்றும், இந்த வாடகை வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொலிஸ் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். வெளிநாட்டு […]
விபத்தில் யாசகர் பலி

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பாதசாரி, சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் அந்தப் பகுதியில் ஒரு யாசகர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக லொரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு […]
சர்ச்சைக்குள்ளான புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்

திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (17) இது தொடர்பில் விளக்கமளித்து பேசும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையிலேயே வைக்குமாறு நாம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால்,அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் […]