2026ம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் அரசவருமானம் அதிகரிப்பு – பிரதமர்

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் வரி மற்றும் வரி அல்லாத வருமானங்களில் வலுவான வளர்ச்சியடைந்து, அரசாங்கத்தின் வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2,152.1 பில்லியன் ரூபாவாக இருந்த வரி வருமானம், 2026 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 2,710.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிரதமர் கூறினார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் திரட்டப்பட்ட வருமானம் 2025 இன் […]
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 15 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அமெரிக்கக் கூட்டாட்சி கடற்போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா (Laura DiBella) தெரிவித்துள்ளார். இதற்கான காங்கிரஸ் அனுமதி எதிர்வரும் சில வாரங்களில் கிடைத்தவுடன், இந்த நிதி உதவி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். லோரா டிபெல்லா தலைமையிலான குழுவினருக்கும் மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் […]
நாமலுக்கு எதிராக ஆதாரங்களை வழங்கிய சர்ச்சைக்குரிய வர்த்தகரை கைதுசெய்யவேண்டும் – எதிர்கட்சி

பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்கு எதிராக ஆதாரங்களை வழங்கிய சர்ச்சைக்குரிய வர்த்தகர் நிமால் பெரேராவையும் கைதுசெய்யவேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் நாடாளுமன்றத்தில் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலஞ்சம் வழங்குவதும் குற்றம் என்பது இலஞ்ச ஊழல் ஆணைக்குகுழுவிற்கு தெரிந்திருக்கவேண்டும். இலங்கையில் பல மோசடிகளில் ஈடுபட்ட பின்னர் நிமால் பெரேரா நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார். நாமல்ராஜபக்வின் கைதுகாரணமாக பெரமுனவின் அனுரதாபுர் பேரணி பெரும் வெற்றியை பெரும் பெருமளவு மக்கள் கலந்துகொள்வார்கள். […]
8 மாவட்டங்களில் 154,167 பேர் எல்நினோவினால் பாதிப்பு

எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த 8 மாவட்டங்களிலுள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 நபர்கள் இந்த எல்நினோ சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்கம் காரணமாக 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 40,945 குடும்பங்களைச் […]
நாமலை பிச்சைக்காரருடன் ஒப்பிட முடியாது: கம்மன்பிலவிற்கு ஹெரத் பதிலடி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பெற்றதாகக் கூறப்படும் பணத்தை பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒப்பிட்டதை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் நிராகரித்துள்ளார். அரசியல் ரீதியான ஒரு விவகாரம் தொடர்பாக பெருந்தொகையான பணத்தைப் பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ஹெரத் தெரிவித்தார். “அப்படிப் பார்த்தால் நாமல் ராஜபக்ஷ […]
இந்திய உதவியின் கீழ் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் தரம் உயர்த்தப்படவுள்ளன

கொழும்பு – இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை (Air defence guns) தரம் உயர்த்துவது, இலங்கையின் முக்கிய சொத்துக்களைப் பாதுகாக்கும் வான் பாதுகாப்பு கட்டமைப்பை கணிசமாக வலுப்படுத்தும். இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ், இலங்கை விமானப்படையின் ஆறு L70 துப்பாக்கிகளை தரம் உயர்த்துவதற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் முன்னதாக இந்தியாவிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டவையாகும். இந்திய […]
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்த ராஜ்நாத் சிங், ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். “நாகரிக இரட்டையர்கள், நெருங்கிய அண்டை நாடுகள் மற்றும் சமுத்திரப் பங்காளிகள்” […]
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார். அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் […]
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டன. இதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இருப்பினும், […]
பேரவை ஒப்புதலின்றி ரூ. 2,000 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி: முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது உரிமை மீறல் புகார்!

சென்னை: முந்தைய திமுக ஆட்சியின் நிறைவுக் காலத்தில், சட்டப்பேரவையின் ஒப்புதல் மற்றும் முறையான நிதி ஒதுக்கீடின்றி ரூ. 2,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு முன்கூட்டியே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட விவகாரத்தில், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மீது தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் நிகழ்வின் முக்கிய விவரங்கள்: விதிமீறல் குற்றச்சாட்டு: பேரவை விதி எண் 219-இன் கீழ், 2026-27ஆம் ஆண்டிற்கான […]