கருப்பு -சூர்யா 46 – அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது?

சூர்யாவின் கருப்பு மற்றும் சூர்யா 46 படங்கள் ஒரே சமயத்தில் தயாராகிக்கொண்டு வருகின்றது. இந்த இரண்டு படங்களில் சூர்யா ரசிகர்களாலும் பொதுவான ரசிகர்களாலும் அதிகம் சூர்யா ஒரே சமயத்தில் இரு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கின்றார். ஒன்று ஆர்.ஜே பாலாஜி இயக்கும் கருப்பு. மற்றொன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46. இவ்விரு படங்களில் தான் சூர்யா தற்போது நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவ்விரு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் […]

‘தி கேர்ள் பிரண்ட்’ படமும் ராஷ்மிகா மந்தனாவின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது

சமீப நாட்களில் நான் மனம் திறந்து கைதட்டி ரசித்த படம் ‘தி கேர்ள் பிரண்ட்’ தான் என தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’, ‘புஷ்பா-2′, ‘சாவா’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக இருக்கின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘தி கேர்ள் பிரண்ட்’ படமும் ராஷ்மிகா மந்தனாவின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது. […]

பிரம்மாண்ட திரைப்படமாக வாரணாசி உருவாகி வருகிறது – மகேஷ் பாபு

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ரூ. 1100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக வாரணாசி உருவாகி வருகிறது. 2027 ஆம் ஆண்டுதான் வெளியீடு என்பதால் விஎஃப்எக்ஸ் தரம் ஹாலிவுட்டுக்கு சவால்விடும் வகையில் அமையலாம் எனத் தெரிகிறது. இதில், நடிகர்கள் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் என பல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசிய மகேஷ் பாபு, “வாரணாசி திரைப்படம் என் […]

இலங்கை தேசிய சுத்தமான உற்பத்தி மைய விருதுகள் 2025

  தலவாக்கலை டீ எஸ்டேட் பிஎல்சி நிறுவனத்தின் ஹொலிரூட் தேயிலை தொழிற்சாலை, தேயிலை துறை – நடுத்தர பிரிவு வகையில் தங்க விருது பெற்றுள்ளது. இவ்விருது, தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கை தேசிய சுத்தமான உற்பத்தி மையத்தில் (NCPC) நடத்தப்பட்ட தேசிய சுத்தமான உற்பத்தி விருதுகள் 2025 விழாவில் வழங்கப்பட்டது. சுத்தமான உற்பத்தி, வளங்கள் திறமையாக பயன்படுத்துதல்,கழிவு குறைப்பு மற்றும் நிலைத்துத் திகழும் தொழில்துறை நடைமுறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கும் […]

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

கடும் மழை மற்றும் பலத்த இடி மின்னல், காற்று தொடர்பில் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் […]

ஜெர்மனியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய ராணுவ சேவை

ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும். இந்த […]

அரசுக்கு எதிராக தீவிரமடைந்த போராட்டம்

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர். இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. […]

அனுராதபுர யாத்ரீகர்கள் பஸ்ஸில் தீ!

கம்பளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து கல்குளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை தீப்பிடித்து எரிந்து நாசமானதாக காவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் உள்ள கல்குளம் கட்டுமான இயந்திர ஆபரேட்டர்கள் கல்லூரிக்கு முன்னால் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, மேலும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினரும் அனுராதபுரம் நகராட்சி தீயணைப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து தீயை விரைவாக […]

மகா பருவ உர மானியம்

இதுவரை 226,015 விவசாயிகளுக்கு மகா பருவ உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 2214 மில்லியன் ரூபாவாகும். இதுவரை மானியம் பெறாத விவசாயிகளின் கணக்குகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பணம் வரவு வைக்கப்படும் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் உள்ளங்கையில் மறைக்கக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு , குரன பகுதியில், உள்ளங்கையில் மறைத்து வைக்கக்கூடிய சுமார் 6 அங்குல நீளமுள்ள சிறிய துப்பாக்கியுடன் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி இதுவரை பாதுகாப்புப் படையினரிடமும் இல்லை என தெரியவந்துள்ளது. குறித்த துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் வகை என தெரியவந்துள்ளது. வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபரின் […]