யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசையும், அசையா சொத்துக்கள் மீது நடவடிக்கை!
நபரொருவர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.