இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!–ரஜீவ்காந்

இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கிருஸ்ணகுமாருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புபிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் நீதியுடனும் இந்த விடயத்தை அணுகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்தியாவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரும், திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னர் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆனால், நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று என்னுடன் தொலைபேசியில் உரையாடிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், கிருஷ்ணகுமாருக்கு எதிராகத் PTAயின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் (இன்னும் உறுதிப்படுத்தவில்லை) தெரிவித்தார்.
ஏற்கனவே தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளைச் சிறையிலும் தடுப்பு முகாமிலும் கழித்த ஒருவர், மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க முயற்சிக்கும் நிலையில், இவ்வாறான தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.
அவரது மனைவியும் பிள்ளைகளும் பல ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அவரைத் தடுத்து வைப்பது அவரது வாழ்க்கையையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மேலும் பாதிக்கும் செயலாகும்.
எனவே, கிருஷ்ணகுமாருக்கு எதிரான தடுப்பாணையை மீள்பரிசீலனை செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குங்கள்.
மனிதாபிமானத்துடனும் நீதியுடனும் இந்த விடயத்தை அணுகுங்கள்

8

“ஆடம்பரத்திற்காக கடன் வாங்கினால் பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்!” – முதல்வர் விஜய் அறிவுரை!

October 29, 2026

சென்னை: உலக சிக்கன நாளை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுமக்களுக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்து

7

“ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடித் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!” – மு.க.ஸ்டாலின் பதிவு!

October 29, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1200-675-27986933-thumbnail-16x9-mayor

“பேசாம மாமன்ற கூட்டத்தை கலைச்சிடுங்க!” – மேயர் பிரியா ஆவேசம்!

October 29, 2026

“‘சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் பிரியா, துணை

5

“காலை ஆபீஸ்… மாலை வீடு… அரசு ஊழியரா முதல்வர் விஜய்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

October 29, 2026

மதுரை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்த நிலையில், தற்போதைய ஆறு மாத தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள்

4

“சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே என் வீட்டில் சோதனை” – கே.என்.நேரு பேட்டி!

October 29, 2026

திருச்சி: மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் திசை திருப்பவே தனது வீட்டில் சோதனை நடந்துள்ளது என்று முன்னாள்

3

“மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளிலும் இலவச பயணம்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

October 29, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் மட்டுமின்றி, அரசு விரைவுப் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் இனி இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று

2

“மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் கொலைகள், பாலியல் கொடுமைகள்!” – புள்ளி விவரங்களை வெளியிட உள்ளதாக வைகோ ஆவேசம்!

October 29, 2026

சென்னை: கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் எண்ணற்ற கொலைகள், காவல் துறை மரணங்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் நடந்திருப்பதாகவும், அதன்

1

“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்!” – சீமான் அறிவிப்பு!

October 29, 2026

நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது

arrest1

ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கைது: காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்

October 29, 2026

பொலிஸ் காவலில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC)

Human

ஹோமாகம சந்தேகநபரின் மரணம்: மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

October 29, 2026

பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மேலும் இரண்டு

123

உடற்பயிற்சிக்குள் கால் ஆட்டும் பழக்கமும் உள்ளடங்குகிறதா?

October 29, 2026

அமர்ந்திருக்கும்போது கால் ஆட்டுவது, மொபைலில் பேசும்போது நடப்பது உள்ளிட்ட தற்செயல் உடல் அசைவுகளும் இதய ரத்தக் குழாய் நோய்களின் அபாயத்தையும்

222

நடைப்பயிற்சியை சாப்பிட்ட உடன் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

October 29, 2026

நாள் முழுவதும் உட்கார்ந்து பணிபுரியும் சூழல் பலருக்கும் உண்டு. என்னதான் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டாலும், நாள் முழுவதும் அமர்ந்து வேலை