சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்படி, உயிரிழந்தவர்களில் 4 சவூதி பிரஜைகளும், 2 பங்களாதேஷ் பிரஜைகளும், அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலையடுத்து மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ரியாத்துக்கான அனைத்து விமானங்களும் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளதுடன் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானச் சேவை கண்காணிப்புத் தளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

குவைத் ஏர்வேஸ் உட்பட பல வளைகுடா விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதேவேளை. இந்தத் தாக்குதலை ஹூதி கிளர்ச்சியாளர்களே நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டிணைவுப் படையின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி, இது ஒரு முழுமையான போர்க் குற்றம் என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தனது நாட்டின் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, சவூதியில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் ஆகியவை, நிலைமை சீராகும் வரை விமான நிலையப் பகுதியைத் தவிர்க்குமாறு தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

யேமனில் சவூதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், அந்த நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் அண்மைய நாட்களாக தீவிரமடைந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக சவூதியின் இரு விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் விமானி ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

அதற்கு முன்னதாக கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் மூவர் பலியாகியிருந்தனர். சனிக்கிழமையன்று தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலும் எறிகணை ஒன்று விழுந்துள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது.

சவூதி அரேபியா தனது கடல் எல்லைகளில் விதித்துள்ள முற்றுகைக்கும், ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதலுக்கும் பதிலடியாகவே சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,