நீதிமன்றம் பொதுமன்னிப்பை இரத்து செய்த பின்னர் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் காமினிவியாங்கொட கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
முன்னைய அரசாங்கங்கள் போல அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கமும் ஞானசார தேரருக்கு சார்பான விதத்தில செயற்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பை நீதிமன்றம் இரத்து செய்த பின்னர் துரிதமாக செயற்படாமை குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெட்கப்படவேண்டும்.
ஞானசார தேரரை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் ஏன் கைதுசெய்யவில்லை என்பதற்கான விளக்கத்தை அரசாங்கம் வழங்கவேண்டும்.கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் என்ன செய்கின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் ஞானசார தேரர் சுதந்திரமாக நடமாடினார், நூலொன்றை வெளியிட்டார்,உயர்நீதிமன்ற தீர்ப்பு தன்மேல் தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை போல நடந்துகொண்டார்..தவறுசெய்தவரை அரசாங்கம் பாதுகாக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகயிருந்தவேளை ஆலயமொன்றில் அவரை சந்தித்தவேளை பொலிஸார் ஞானசாரதேரரை கைதுசெய்யாமலிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன், அவர் உடனடியாக சாகரரத்நாயக்கவை தொடர்பு கொண்டார் மறுநாள் தேரர் சரணடைந்தார்.
ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் ஞானசாரதேரரை பாதுகாத்தது அதனை அவர்கள் பாணியில் செய்தார்கள் தற்போதைய அரசாங்கம் அதனை செய்கின்றதுஎன காமினி வியாங்கொட குற்றம்சாட்டியுள்ளார்
(ரி)