தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல் ஆரம்ப நாளான இன்று (15) யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வில் முதல்வர் திருமதி.வி.மதிவதனி அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல்வர் தனது நினைவு கூறல் அஞ்சலி உரையில் அஹிம்சையை உலகுக்கு உணர்த்திய காந்திய வழியில் ஒரு துளி நீரையேனும் அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக மன்னுயிறை ஈகம் செய்த லெப்டினன்கேணல் திலீபன் அவர்களின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராட்டத்தின் சுவடுகளை என்றும் நெஞ்சில் சுமக்க உறுதி பூணுவதே பசியுடன் உயிர் நீத்த மாவீரன் இராசையா பார்த்தீபனுக்கு நாம் செய்யும் உணர்வு பூர்வமான அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.
முதலாவது சுடரை முதல்வர் ஏற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பிரதி முதல்வர், கௌரவ உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
