திண்டுக்கல்:
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்த காரணத்திற்காகத் தவெகவினர் பலர் ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
-
கள்ளச்சந்தையில் மது விற்பனை: தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், பகல் 12 மணிக்கு முன்பும் இரவு 10 மணிக்கு பின்பும் மது விற்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். நேரக் கட்டுப்பாட்டை மீறி மது விற்பனை நடப்பதாகக் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால், அதில் ஈடுபடுவோர் எக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
-
அதிகாரிகள் மீதும் ஆக்ஷன்: மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது மட்டுமின்றி, அதனைத் தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் இனி கடும் நடவடிக்கை பாயும்.
-
கனிமவளக் கொள்ளை: விவசாயப் பயன்பாட்டிற்காக எனக்கூறி, வணிக நோக்கத்திற்காக மண் எடுப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்வதில் நாங்கள் கட்சியையோ ஆட்களையோ பார்ப்பதில்லை.
-
தவெகவினர் மீது நடவடிக்கை: இதற்குக் கடந்த காலங்களில் தவறு செய்த பல தவெக பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதே சாட்சி. நாங்கள் திமுக மாதிரி இல்லை; தவறு செய்தது தவெகவினராகவே இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Hashtags:
#MinisterVignesh #TVKGovt #Dindigul #TASMAC #IllegalMining #TNPolitics #ActionTaken #TamilNaduNews #TamilNews #BreakingNewsTamil