இலங்கைக்கு 19 கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட 1,200,000 மெட்ரிக் தொன் நிலக்கரி காணாமல்போயுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச அதன் பெறுமதி 4.62 பில்லியன் என தெரிவித்துள்ளார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.
நாமல்ராஜபக்ச தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
19 கப்பல்களில் கொண்டுவரப்பட்ட நிலக்கரிகள் தொடர்பான ஆவணங்களின்படி தொன் நிலக்கரி பற்றாக்குறை நிலவுகின்றது.இது இரண்டு நிலக்கரி கப்பல்களின் அளவிற்கு சமமானது.இந்த நிலக்கரியை விழுங்கியது யார்?
தவறான வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் 2.5 மில்லியன் டொலர் பணப்பரிமாற்றம் குறித்தும் சுட்டிக்காட்டவேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு தொடர்புள்ளதா என கேள்வி எழுப்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.