சென்னை:
சட்டப்பேரவையில் விவாதங்கள் நடைபெறும்போது, முதலமைச்சர் என்ற முறையில் தான் ஏன் அடிக்கடி குறிக்கிட்டுப் பேசுவதில்லை என்பது குறித்து காவல் துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது முதல்வர் விஜய் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
-
தலைமைப் பண்பு: சட்டமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரின் கேள்விக்கும் எல்லா நேரத்திலும் இடைமறித்துப் பேசுவது ஒரு தலைமைக்கு அழகல்ல. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில் அவசரப்பட்டுப் பேசுவதும் சரியாக இருக்காது.
-
8 கோடி மக்களின் நலன்: சட்டமன்றத்தில் பேசுவது தனிப்பட்ட நபர்களுக்காக அல்ல; 8 கோடி மக்களின் நலன்களைத் தீர்மானிப்பதற்காகவே பேசுகிறோம் என்ற அடிப்படைப் புரிதல் தனக்கு உள்ளது. எப்போதுமே முழுமையான தயாரிப்புடன், மக்களுக்காகத் தன் மனதில் பட்டதை மட்டுமே பேசுவதாக அவர் தெரிவித்தார்.
-
கூட்டுப் பொறுப்பு: அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து, துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர்கள் பதிலளிப்பது எல்லா ஆட்சிகளிலும் நடைபெறும் இயல்பான நடைமுறைதான். ஆனால், தற்போதைய எதிர்க்கட்சியினர் (திமுக) அதனை வசதியாக மறந்துவிட்டு விமர்சிப்பதாக அவர் சாடினார்.
-
உண்மையான தலைமை: ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தத்தம் தொகுதி மக்களின் குரலாகவே அவையில் ஒலிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களின் பேச்சைப் பொறுமையாகக் கேட்டு, அதற்குப் பொறுப்புடன் உரிய பதிலளிப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு என முதலமைச்சர் விஜய் விளக்கமளித்தார்.
Hashtags:
#ChiefMinisterVijay #TVKGovt #TNAssembly #Leadership #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil