இ*ராணுவ மு*காமுக்கு அருகில் கா*ணாமற் போன ரஜனிக்கு என்ன நடந்தது?

 1996 ஆம் ஆண்டு இ*ராணுவத்தினரால் ப*டு*கொ*லை செய்யப்பட்டவர்தான் இந்த ரஜனி.
ரஜனி வேலாயுதம்பிள்ளை வயது 22 என்ற இளம் யுவதி கோண்டாவில் பகுதியில் வைத்து இ*ராணுவத்தினரால் ப*டு*கொ*லை செய்யப்பட்டார்.
இவர் யாழ்,கோண்டாவில் டிப்போவுக்கு அருகாமையில் அமைந்துள்ள இ*ராணுவ முகாமினை அண்மித்த பகுதியில் வைத்து 30.09.1996ம் ஆண்டு காணாமல் போயிருந்தார்.
தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்குப் பயணமாக தயாராக இருந்தார்.
வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்து முடித்தவர் மானிப்பாய் பகுதியிலுள்ள உள்ள தனது உறவினர்களுக்கு பயணம் பற்றி கூறுவதற்காக பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியிலுள்ள காவலரண் ஊடாகச் சென்ற ரஜனி பின்னர் வீடு திரும்பவில்லை.
உடனே வீடு திரும்புவதாக கூறிச் சென்றவர் அன்றைய தினம் வீடு திரும்பாததால் போக்குவரத்து சிக்கலால்தான் வராமல் உள்ளாரென நினைத்த அவரது உறவுகள் அன்று ரஜனியை தேடாமல் விட்டுள்ளனர்.
மறுநாளும் மதியம் வரை ரஜனி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவளது அண்ணன் மானிப்பாய்க்கு சென்று உறவினர்களிடம் விசாரித்த போது ரஜனி நேற்றே திரும்பிச் சென்று விட்டதாக கூறியுள்ளார்கள்.
அதன் பின்னரே அண்ணன் உட்பட உறவினர்கள் ரஜனியை இராணுவ முகாம் முகாமாக தேடத்தொடங்கினர்
பொலிசாரிடமும் முறையிட்டுள்ளனர்.
(தனது சகோதரனுடன் சேர்ந்து சென்றவேளையே சகோதரன் திருப்பி அனுப்பப்பட்டு ரஜனி காவலரணில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இராணுவத்தினரின் இந்த சம்பவம் பற்றி பலரும் கதைக்க பயப்பட்டதனால் கிருசாந்தி கொலை வழக்குப்போல இதன் முழு விபரங்கள் இணையங்களில் பெரிதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
சகோதரன் முறையிட்டதில் எந்தவித தகவலும் கிடைக்காமல் இருந்தது.ரஜனி காணாமல் போய் இரண்டு கிழமைகள் ஆகிய நிலையில் கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு பின்புறமாக உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசவே அங்கு சென்று சிலர் பார்த்த போது பாதி திறந்து அரை குறையாக மூடப்பட்டிருந்த மலக்குழி ஒன்றினுள் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள்.
அதன் பின்னரே காணாமல்போன ரஜனியின் சடலம்தான் அது என அடையாளம் காணப்பட்டது. ரஜனி அணிந்திருந்த சங்கிலி, தோடு, உடைகள் மற்றும் சைக்கிள் என்பனவும் அடையாளம் காணப்பட்டது. இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட வி*சாரணைகளில் அப்பகுதியில் கடமையிலிருந்த ஆறு(06) படையினர் கைது செய்யப்பட்டனர்.
ரஜனியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரஜனியின் வாய்க்குள் இருந்து ரஜனி அணிந்திருந்த உள்ளாடைகள் தொண்டை வரை அடையப்பட்டவாறு காணப்பட்டதாக தெரியவருகின்றது.
வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆட்கள் அற்ற வீட்டுக்குள் தூக்கிச் சென்று ஆறு(06) இராணுவத்தினர் ரஜனியை பா*லியல் வ*ன்கொடுமை செய்துள்ளார்கள். ரஜனியை பாலியல் து*ஷ்பிரயோகம் செய்த 5வது மற்றும் 6வது ராணுவச் சிப்பாயும் அரச சாட்சியாக மாறினார்கள்.
அந்த இரு சிப்பாய்களும் ரஜனியை து*ஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போதே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். அத்துடன் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரஜனியின் சடலத்தை தூக்கிச் சென்று மலசல கூட குழிக்குள் போட்டுள்ளார்கள்.
பல வருடங்களாக இழுபறியில் இருந்த வழக்கினை இலங்கை அரசாங்கமானது போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக 2011 ஆம் ஆண்டு அவசர அவசரமாக தூசு தட்டி எடுத்து முடித்து வைத்தது.
இதில் மூன்று (03) இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் சாட்சியாளராக சீ.குணசிங்கம் அவர்கள் கோண்டாவில் பகுதியில் இருந்து வழக்குகளிற்காக கொழும்பு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு கொழும்பு நீதிமன்றில் நடைபெற்ற போது அரச சட்டத்தரணியாக கடமையாற்றியவர் பிரசாந்தி என்ற பெயருடைய சிங்கள பெண் சட்டத்தரணி ஆவார். (குறித்த பெண் அரச சட்டத்தரணியே கிருசாந்தி கொலை வழக்கிலும் ஆஜராகியிருந்தார்)
பிரசாந்தியுடன் சேர்ந்து ரஜனியின் குடும்பத்தினரின் நலன்களைக் கவனிப்பதற்கு என என். ரவிராஜ் சட்டத்தரணியும் க.பூபாலசிங்கம் சட்டத்தரணியும் செயற்பட்டார்கள். அப்போது கடமையிலிருந்து பிரதம நீதவான் முனிதாச முன்னிலையில் படையினர்கள் தரப்பு சட்டத்தரணியாக சஞ்யேத்கம என்பவர் ஆஜராகி வாதிட்டார்கள். குறித்த வழக்கின் முக்கிய சாட்சியாக அப்பகுதியில் கடமையாற்றிய பொலிஸ் உபாலி அவர்கள் பின்வருமாறு சாட்சி கூறியுள்ளார்.
“நான் காவல் கடமையிலிருந்த காவலரண் கோண்டாவிலுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பலாலி வீதியில் அமைந்திருந்தது. குறித்த காவல் நிலையத்திற்கு அருகில் கடைகளும் இருந்தன. குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிய 1ம், 3ம், 4ம் எதிரிகள் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் ரஜனியை குண்டுக் கட்டாகத் துாக்கிக் கொண்டு செல்வதை அவதானித்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் 3ம், 4ம் எதிரிகள் என்னையும் வருமாறு அழைத்தனர். நான் மறுத்துவிட்டேன்.
அதன் பின்னர் அவர்கள் மேலும் ஒரு மணி நேரம் ரஜனியுடன் காணப்பட்டார்கள். பின்னர் அவர்கள் வெளியே வரும் போது அதிர்ச்சியான நிலையில் இருந்தார்கள். நான் என்ன நடந்தது என கேட்ட போது அவள் இறந்து விட்டாள் என தெரிவித்தார்கள்.
அத்துடன் என்னையும் இது தொடர்பாக யாரிடமும் கூற வேண்டாம் என அச்சுறுத்தினார்கள். அதனால் நான் பயத்தில் யாரிடமும் கூறவில்லை” என இவ்வாறு சாட்சியமளித்துள்ளார் சம்பந்தப்பட்ட பொலிசார்.
முடிவு
1996-இல் ப*டு*கொ*லை செய்யப்பட்ட ரஜனிக்கு நீதி கிடைக்குமென 15 வருடங்களுக்கு மேலாக போராடிய குடும்பம்…
2011-இல் கடுமையான சாட்சிகளுடன் மூன்று இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால்…
2023-இல், அந்த இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது
மற்றவர்கள் மேல் முறையீடு செய்துள்ளார்கள். அவர்களும் விரைவில் வெளிவரலாம்.
dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை