தென்காசி:
தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், த.வெ.க. கூட்டணி மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அவரது பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
-
கூட்டணியில் முரண்பாடு இல்லை: தமிழகத்திலிருந்து ஒருவர் தேசிய அளவில் உயர் பதவிக்கு வர வேண்டும் என்பது அனைவரின் ஆசையும்தான். இதில் எந்தச் சர்ச்சையும் இல்லை. காலத்திற்கேற்ப இயற்கையே எல்லாவற்றையும் உருவாக்கும்; இதனால் எங்கள் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமோ பிரச்சினையோ இல்லை.
-
சுவாரஸ்யத்துக்காக எழுப்பப்படும் கேள்விகள்: ஊடகங்கள் தங்களுக்குரிய சுவாரஸ்யத்திற்காக மட்டுமே இது போன்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றன. நாங்களே கடந்த ஆண்டு த.வெ.க. ஆட்சிக்கு வரும் என்று ஆணித்தரமாகச் சொன்னோம், அதுபோலவே இன்று நடக்கிறது.
-
தேவைற்ற விவாதங்கள்: இன்னும் 3, 4 ஆண்டுகள் ஆட்சிக் காலம் உள்ள நிலையில், இது குறித்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வெளி நபர்களுக்குத் ‘தீனி’ போடும் வகையில் இதைப் பெரிய விஷயமாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
Hashtags:
#NirmalKumar #TVKGovt #TenkasiNews #TNPolitics #AIADMKAlliance #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil