குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இன் று 26 .08.2026 இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரம் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், திணேஸ்குமார் டிலாணி வயது 17 கிளிநொச்சி செல்வா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

