கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் பிள்ளையானைத் தவிர கதிர்காத்தம்பி ஜெயகிஷன் (ஜெயந்தன்), நிமால் தேவ்சுகன் (ஜெயகாந்தன்) மற்றும் நடராசா நாகுலேந்திரன் (சிம்பு அல்லது நாகுலன்) ஆகியோரே ஏனைய பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதிக்கும் டிசம்பர் 18 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன