மூதூர் படுகொலைகள் நினைவுகூரலால் குறிக்கப்படும் மற்றொரு சம்பவமாக மாறிவிடக்கூடாது !

மூதூர் படுகொலைகளின் 20ஆவது ஆண்டு நிறைவு என்பது வெறுமனே நினைவுகூரலால் மாத்திரம் குறிக்கப்படும் மற்றொரு சம்பவமாக மாறிவிடக்கூடாது. மாறாக இது சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை என்பதையும், சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் மற்றும் மிக மோசமான மனித உரிமைமீறல்களில் ஈடுபடுவோர் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் இலங்கை அரசாங்கம் நிரூபிக்கும் சம்பவமாக அமையவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில், 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ (பட்டினிக்கு எதிரான இயக்கம்) அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் அதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மூதூர் படுகொலைகள் தொடர்பில் அடுத்தடுத்து ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கங்கள் தொடர் விசாரணைகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும், இந்தக் கொலைகளுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இந்த நீண்டகாலத் தோல்வி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உண்மை மற்றும் நீதிக்கான உரிமையை மறுதலித்திருப்பதுடன் சட்டத்தின் ஆட்சி மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் அதிகாரிகள் கொண்டிருக்கும் கடப்பாடு மீதான நம்பிக்கையை சீர்குலைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 20 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருப்பது என்பது மிக நீண்டகாலக் காத்திருப்பாகும். அவர்கள் இரு தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களை இழந்ததன் வலியைச் சுமந்துவருகின்றனர். அவ்வாறிருந்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யத் தவறிவிட்டது.

மூதூர் படுகொலைகளின் 20 ஆவது ஆண்டு நிறைவு என்பது வெறுமனே நினைவுகூரலால் மாத்திரம் குறிக்கப்படும் மற்றொரு சம்பவமாக மாறிவிடக்கூடாது. மாறாக இது சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை என்பதையும், சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் நிரூபிக்கும் சம்பவமாக அமையவேண்டும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தப் படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நியமங்கள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாக சுயாதீனமானதும், நடுநிலையானதுமான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,

images (9)

“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – 10,000 ஏரிகள் வறண்டதால் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

August 24, 2026

சென்னை தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுள்ளதைக் சுட்டிக்காட்டி, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க

vck-tvk

“ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகிறதா த.வெ.க?” – விசிக சரமாரி கேள்வி!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஊழல் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியில் இணைத்து வருவதாகக்

images - 2026-08-24T175653.807

“3 கோப்புகளை ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் வெளியிட வேண்டும்!” – துரைமுருகன் அதிரடி சவால்!

August 24, 2026

வேலூர் வேலூர் காட்பாடி காந்திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், த.வெ.க.வினரின் விமர்சனங்களுக்கும், முதலமைச்சர் விஜய்யின்

collage-1755054530

“வகுப்பறை முதல் ஆய்வகம் வரை!” – அரசுப் பள்ளிகளின் ரூ.4,200 கோடி உள்கட்டமைப்புத் தேவைகள் பட்டியல் வெளியீடு!

August 24, 2026

சென்னை அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராகத் தரம் உயர்த்தும் நோக்கில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்

Ex0nP5VXEAEUsfN

1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகள் மின்பதிவாக்கம்: இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு முயற்சி!

August 24, 2026

மதுரை தமிழகக் கோவில்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட மன்னர் காலக் கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய அரிய ஓலைச்சுவடிகளை வருங்காலத்

Edappadi-Palaniswami-KA-Sengottaiyan

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் விரைவில் த.வெ.க.வில் இணைவார்கள்!” – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேச்சு!

August 24, 2026

கோபி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை

1

“சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்!” – முதலமைச்சர் விஜய் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்!

August 24, 2026

சென்னை சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 2-ஆம் கட்டமாக 750 புதிய தாழ்தளக் குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் (AC