சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் குழந்தைகளைக் கவர முயன்ற 57 வயது தொராண்டோ நபர் – குற்றச்சாட்டுகள்

Snapchat, TikTok மற்றும் Fortnite ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் உள்ள குறைந்தபட்சம் 15 குழந்தைகளைக் கவர்ந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற தொராண்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் 68 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

சமூக ஊடகங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருட்கள் (CSAEM) பதிவேற்றப்படுவதாகக் கடந்த மார்ச் மாதம் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகப் பொலிஸார் புதன்கிழமை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் பிராட்வியூ வீதி (Broadview Street) மற்றும் டான்ஃபோர்த் அவென்யூ (Danforth Avenue) அருகில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார் சோதனையிட்டனர். அங்கு குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான மின்னணு சாதனங்களைக் கண்டறிந்த புலனாய்வாளர்கள், அவற்றில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

மேலும், சந்தேகநபர் இணையத்தில் குழந்தைகளைக் கவரவும் துஷ்பிரயோகம் செய்யவும் பெண் வேடமிடுவது உட்படப் போலி அடையாளங்களைப் பயன்படுத்தியதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

57 வயதான மெடின் உகுர் (Metin Ugur) என்பவர் ஏப்ரல் 16 அன்று கைது செய்யப்பட்டு, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை அணுகுதல் மற்றும் கைவசம் வைத்திருத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.

அவர் தனது ஆண் இணைய அடையாளத்திற்காக “Chase_woolf”, “Chase_woolf13”, “Noah.scout”, “Noah_scout_13” ஆகிய பெயர்களையும், பெண் அடையாளத்திற்காக “Hey_woolfie” என்ற பெயரையும் பயன்படுத்தியதாகப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். உகுர் தனது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ள Discord மற்றும் Instagram ஆகிய தளங்களையும் பயன்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

விசாரணை தீவிரமடைந்த நிலையில், அல்பெர்ட்டா, ஒன்ராறியோ, கியூபெக் ஆகிய பகுதிகள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் மேலதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பொலிஸார் கண்டறிந்தனர்.

இதன் விளைவாக, 18 வயதுக்குட்பட்ட நபரைக் கவர முயன்றமைக்கான 14 குற்றச்சாட்டுகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட நபருக்குப் பாலியல் ரீதியான தகவல்களைக் கிடைக்கச் செய்தமைக்கான 7 குற்றச்சாட்டுகள் உட்பட மேலதிகமாக 61 குற்றச்சாட்டுகளைப் புலனாய்வாளர்கள் உகுர் மீது சுமத்தியுள்ளனர்.

“இணையவழிச் சிறுவர் சுரண்டலுக்கு எல்கைகள் இல்லை, அதேபோல் தான் எங்கள் விசாரணைகளுக்கும் எல்கைகள் இல்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, சான்றுகள் எங்குச் செல்கிறதோ அங்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவோம்” என்று இணையவழி சிறுவர் சுரண்டல் பாலியல் குற்றப்பிரிவின் துப்பறியும் சார்ஜென்ட் அலிசியா முர்ரே (Alicia Murray) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். “மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர், தகவலறிந்த எவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.”

குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படம் எதுவுமில்லை என்று பொலிஸார் சிடிவி நியூஸிடம் (CTV News) தெரிவித்தனர்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்