சிறைச்சாலை ஒன்றிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற பூனை?

சிறைச்சாலை ஒன்றிற்குள், போதைப்பொருள்களைப் கடத்த முயன்ற பூனை ஒன்றை பொலிஸார் மடக்கிப்பிடித்த சுவாரசியமான சம்பவம் ஜூலை 21ஆம் திகதி நடைபெற்றுள்ளது. மேற்கு ரஷ்யாவின் ‘நிழ்னி நோவ்கோரோட்’ (Nizhny Novgorod) பகுதியில் அமைந்துள்ள சிறைக்குள்ளே இந்த பூனை போதைப்பொருளை கடத்தியுள்ளது.

அச்சிறைச்சாலையின் அதிகாரிகள் அந்தப் பூனையைப் பிடித்து, அதன் கழுத்தில் சுற்றப்பட்டிருந்த இரண்டு கைவினைப் பட்டைகளைப் (Collars) பிரித்தெடுத்து, அதற்குள் பொதி செய்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

நாய் மற்றும் பூனைகளுக்கிடையிலான வழக்கமான மோதலுக்கு அமைவாக, பூனை சிறை வளாகத்திற்குள் நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகவே, போதைப்பொருள் கடத்தி வரப்படுவதைச் மோப்ப நாய்கள் முதன்முதலில் கண்டறிந்தன. உடனே விழித்துக்கொண்ட பொலிஸார், அந்தப் பூனையை விரைந்து பிடித்துள்ளனர்.

பூனையின் கழுத்திலிருந்த பட்டைகளைக் கழற்றிய அதிகாரிகள், அதற்குள் இருந்தது போதைப்பொருள் என்பதை உறுதிசெய்து அவற்றை முழுமையாகக் கைப்பற்றினர்.

இது தொடர்பாக ‘ரஷ்ய கூட்டாட்சி சிறைச்சாலை சேவை’ (Federal Penitentiary Service of Russia) தனது தந்திச் செயலியில் (Telegram) பதிவிட்டுள்ளதாவது:

“குற்றவாளிகள் சிலர் ‘சிறைச்சாலை எண் 17’க்கு போதைப்பொருள்களை விநியோகிக்க ஒரு பூனையைப் பயன்படுத்தியுள்ளனர். அச்சிறைச்சாலையின் ஊழியர்கள், அந்த விலங்கின் கழுத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் அடங்கிய இரண்டு துணிப் பட்டைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.

மீசையுள்ள இந்தத் தூதுவர், சிறைக்குள் ரகசியமாக நுழைந்து கைதிகளுக்கு இந்தச் சட்டவிரோதப் பார்சலை வழங்க முயன்றுள்ளார். ஆனால், விழிப்புடன் இருந்த அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

சேவை மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்த நிபுணர், பூனையின் கழுத்துப் பட்டையில் போதைப்பொருள் இருப்பதை உறுதிசெய்தார்.

தடைசெய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, அந்தப் பூனை நலமுடன் இருப்பதை ஊழியர்கள் உறுதிசெய்து, பின்னர் அதனை விடுவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே பரிசோதிக்கப்பட்ட அந்தப் பூனைக்கு எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை என்றும், ஆரோக்கியமாக இருந்ததால் அது மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் அப்பூனை சிறைத் தண்டனையிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளது.

இருப்பினும், இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இருந்த நபர்கள் பற்றியோ அல்லது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் வகை குறித்தோ அதிகாரிகள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

விலங்குகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட பிற சம்பவங்கள்:
கடந்த ஆண்டும் ‘கோஸ்டாரிகா’ (Costa Rica) நாட்டில், உடம்பில் ‘கிராக் கொக்கைன்’ (Crack cocaine) ஒட்டப்பட்ட நிலையில் சிறைக்குள் நுழைய முயன்ற பூனை ஒன்று அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது.

அப்போது பூனையின் உடலில் கட்டப்பட்டிருந்த இரண்டு பாக்கெட்டுகளில் இருந்து 235 கிராம் கஞ்சா மற்றும் சுமார் 70 கிராம் எடையுள்ள ‘கிராக் கொக்கைன்’ பேஸ்ட் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அண்மையில், ‘பென் நெவிஸ்’ (Ben Nevis) மலைப்பாதையில் வீசப்பட்டிருந்த கஞ்சாவை உட்கொண்ட ‘டோக்கியோ’ (Tokyo) என்ற லேப்ரடார் ரக மோப்ப நாய் ஒன்று மீட்கப்பட்டது.

பிரித்தானியாவின் மிக உயரமான மலையில் தனது உரிமையாளர் கிறிஸ்டினா (Christina Bluhme) என்பவருடன் ஏறிக்கொண்டிருந்தபோது, அந்நாய் விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்கியது.

கடந்த வார இறுதியில், 4,413 அடி உயரமுள்ள பென் நெவிஸ் மலையின் பாதியை எட்டியபோது, டோக்கியோ மயங்கி விழுந்தது.

பயந்துபோன நாய் பயிற்சியாளரான கிறிஸ்டினா, உடனடியாக ‘லோச்சபர் மலை மீட்புக் குழுவை’ (Lochaber Mountain Rescue) தொடர்புகொண்டார். மீட்புக் குழுவினர் 55 கிலோ எடையுள்ள அந்நாய் குட்டையை ஸ்ட்ரெச்சரில் வைத்து பாதுகாப்பாகக் கீழே கொண்டு வந்தனர்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109