தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது !

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமான முறையில் ஊடுருவிய, இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள இலங்கையர்கள் இருவரை ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு இன்று (24) அதிகாலை இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் சென்று இறங்கியதாக ராமேஸ்வரம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது இலங்கையை சேர்ந்த இருவர் வந்திருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார், ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட்டாலை, ம்பகா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 30, 31 வயதுகளையுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் நேற்று (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து 3 லட்சம் பணம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு இன்று (24) அதிகாலை சுமார் 4 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் சென்று இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும், ஐஸ், ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல, நிலுவையில் உள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்ட விரோதமாக மறைந்திருப்பதற்காக இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என மரைன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட இருவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை மற்றும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையர்கள் இருவர் மீதும், மரைன் பொலிஸார், சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டின்றி தமிழகத்துக்கு ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்து, புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், கியூ பிரிவு பொலிஸார், கைதான இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கையில் நிலுவையில் உள்ளதால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது என தீர்மானித்துள்ளனர்.

இதனால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதியில் நேற்று (23) தொடங்கிய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று (24) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள குறித்த இருவரும் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுறுவிய சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த