49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியேற்றிச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர், வியாழக்கிழமை (23) அன்று அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மலேசியாவில் ஓட்டுநராகப் பணிபுரியும் 42 வயதுடைய மலேசியக் குடிமகன் ஆவர்.
இவர் வியாழக்கிழமை (23) அதிகாலை 12.25 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ‘எயர் ஏசியா’ நிறுவனத்திற்குச் சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பைகளைச் பரிசோதித்தபோது, சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 33,000 சிகரெட்டுகள் அடங்கிய 165 சிகரெட் அட்டெட்டிகள் (Cartons) மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.