நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தேடி, அவர்களது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (09) அன்று சிறைச்சாலை முன்பாகக் கூடியிருந்தனர்.
சிறைச்சாலையிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் பெயர் விபரங்கள், சிறைச்சாலைக்கு வெளியே வீதியோரத்தில் உள்ள கொள்கலன் (Container) பெட்டியிலும், சுவரொட்டிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகக் காவல்துறை அதிகாரிகள், அவ்விபரங்களை உறவினர்களுக்கு தெரியப்படுத்தினர். இருப்பினும், தொடர்ந்து சிறையிலுள்ள கைதிகளின் விபரங்கள் தமக்குத் தெரியவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலுள்ள ஆண் கைதிகளை, ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள வசதிகளைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து இடமாற்றம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இச்சிறையில் இன்னும் சுமார் 1,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.