ஈரோடு:
வருவாய் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் செங்கோட்டையன், நத்தம் நிலங்களில் வசிக்கும் 20 லட்சம் பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், விற்பனை செய்யவோ அல்லது கடன் பெறவோ முடியாமல் இருந்த ‘ஜீரோ வேல்யூ’ நிலங்களை, அரசு மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்புமிக்க நிலங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் ‘ஜீரோ வேல்யூ’ நில உரிமையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்வாகத்தை எளிதாக்கப் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் ஆன்லைனில் கொண்டு வரப்படும் என்றும், இதற்காகத் தனிநபர் அடையாளத் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஏழை மற்றும் எளிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பட்டா விவகாரத்தில், தவெக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்த்து, வீட்டிலிருந்தே சேவைகளைப் பெறும் வகையில் ஒட்டுமொத்த நிர்வாகமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
#Sengottaiyan #RevenueDept #LandPattas #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #LandReform #Politics2026 #Governance #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash