இலங்கை கடற்படையினால் 2026 ஜூன் 16 முதல் 30 வரையான காலப்பகுதியில், நாட்டின் கடல் பிராந்தியங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தேழு (27) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன், சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட பத்து (10) டிங்கிப் படகுகள் மற்றும் இரண்டு (02) கேனோ படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை சூடைகுடா, ஸ்விட் பே (Sweet Bay), யாழ்ப்பாணம் உடுத்துறை, வெத்தலைக்கேணி, கட்டைக்காடு, சிலாவத்துறை மற்றும் சாவாரிபுரம் கடற்கரை உள்ளிட்ட கடல் பிராந்தியங்களில், கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் என்பன, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிலும், மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.