கடந்த 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, சட்டவிரோதமாக சிறைபிடித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) திங்கட்கிழமை நிர்ணயித்துள்ளது.
அதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.