இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூன் 25) கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான மேலும் பல அதிர்ச்சியூட்டும் விபரங்கள் இன்றைய தினத்திற்குள் பகிரங்கப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குмара திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ மற்றும் சஜித் தரப்பின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விபரத்தை வெளியிட்டார்.
எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி மேலும் பேசுகையில்,
“இவ்வாறான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர்களை எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் முகாம்களுக்குள் தொடர்ந்தும் வைத்திருக்குமா என்பது தான் தற்போது எழும் கேள்வியாகும்,” எனச் சுட்டிக்காட்டினார்.
பாதாள உலகத் தலைவர் ‘ஹரக் கட்டா’வை தப்பவைக்க 50 கோடி ரூபா இலஞ்சம் கோரப்பட்ட வழக்கில் இந்த உயர்மட்டக் கைதுகள் அரங்கேறியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த நாடாளுமன்ற உரை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது