ஈரான் இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்

இஸ்ரேலின் வடக்கு பகுதியை இலக்கு வைத்து ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை வௌியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு எச்சரிக்கை மட்டுமே என தெரிவித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு, இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தால், அடுத்தகட்ட பதிலடிகள் இன்னும் பரந்த அளவில் இருக்கும் என்றும், அவை பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளையும் உள்ளடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹைஃபா நகருக்கு தென்கிழக்கே அமைந்துள்ள ரமத் டேவிட் விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன என்றும் அந்த படை குற்றம் சாட்டியுள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதலை நடத்துவதை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா ஈரானுடன் மேற்கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று டொனால்ட் டிரம்ப் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெதன்யாகுவுக்கு வேறு வழியே இருக்காது. நான்தான் இறுதி முடிவுகளை எடுப்பவன், அனைத்து முடிவுகளையும் நானே எடுக்கிறேன். அவர் முடிவுகளை எடுப்பதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மூன்று தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, ஈரானின் சமீபத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என நெதன்யாகுவிடம் கோருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த

fue

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து

6

“சாத்தான்குளம் இரட்டைக் கொலை குற்றவாளிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி கிடையாது!” – மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் போலீசாரின் மனுவை அசுர வேகத்தில் தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்!

June 13, 2026

மதுரை: “உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில்

5

“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார்!” – பட்ஜெட் மாஸாக இருக்கும் எனத் தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அறிவிப்பு!

June 13, 2026

தூத்துக்குடி: “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்; தவெக அரசின்