வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை

வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்திகள் முற்றுமுழுதான பொய் என்பதை வவுனியாவில் நடைபெற்ற இந்த வெசாக் உற்சவம் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

பொய் பரப்புபவர்கள் வார்த்தைகளால் பிரிக்க முயல்கிறார்கள், நாம் செயலால் இணைகின்றோம். அதுவே எமது பதில் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண வெசாக் உற்சவம்’ நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வவுனியா, பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வடக்கு – கிழக்கு பிரதம சங்கநாயக்கரும் மடுகந்த சிறி தலாதா விகாராதிபதியுமான வணக்கத்துக்குரிய ஆனந்த தேரர், வடக்கு – கிழக்கு உதவி சங்கநாயக்கர் அட்டமகஸ்கட கல்யான திஸ்ஸ தேரர், பிரதி அமைச்சரும் வன்னித் தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வவுனியா மாவட்டச் செயலாளர், வவுனியா மாவட்ட மேலதிகச் செயலாளர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் வன்னிப் பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், 56ஆவது படையணியின் பிரிகேட் கொமாண்டர், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.

மிகவும் பக்திபூர்வமாக ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த இந்த வெசாக் உற்சவத்தில், தர்ம போதனை, மிகப் பிரமாண்டமான வெசாக் ஊர்வலம் விருந்தினர்களின் பங்கேற்புடன் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடைபெற்றது. தொடர்ந்து வெசாக் கூடுகளின் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இறுதியாக தானம் வழங்கல் (தன்சல்) மற்றும் மேடை நிகழ்வுகளுடன் கூடிய பக்தி கீதம் இசைத்தல் உள்ளிட்ட பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் வரையில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், “வெசாக் என்பது உலக பௌத்த சமூகத்துக்கு மிகவும் புனிதமான நாளாகும்.

கௌதம புத்தர் பிறந்ததும், ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் அடைந்ததும் ஆகிய மூன்று மகத்தான நிகழ்வுகளும் இந்தப் பௌர்ணமி நாளிலேயே நிகழ்ந்தன. இங்கு ஏற்றப்படும் ஒவ்வொரு வெசாக் கூடும், அகல் விளக்கும் வெறும் அலங்காரங்கள் அல்ல, அவை அமைதியின், அன்பின் ஒளியை இவ்வுலகுக்குப் பரப்பும் சின்னங்களாகும்.

வடக்கு மாகாணம் என்பது பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எனப் பல இனங்களும் மதங்களும் அண்டை அயலவர்களாய், சகோதரர்களாய் வாழும் பூமியாகும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளைப் புறந்தள்ளி, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்துள்ளோம் என்பதை இந்த நிகழ்வு உலகுக்குப் பறைசாற்றுகின்றது.

புத்தபெருமான் நமக்கு விட்டுச்சென்ற போதனைகள் வெறும் கோயில் சுவர்களில் எழுதி வைக்கும் வாசகங்கள் அல்ல, நம் அன்றாட வாழ்க்கைக்கான வழிகாட்டிகளாகும். தம்மபதத்தில் புத்தர் கூறிய ‘வைரத்தால் வைரம் ஒருபோதும் தணியாது, அன்பால் மட்டுமே வைரம் தணியும்’ என்ற போதனையானது, நீண்ட காலம் போரின் வடுக்களைச் சுமந்த இந்த மண்ணுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

பழியைப் பழியால் வென்றுவிட முடியாது. அன்பும், மன்னிப்பும், சமாதானமுமே அந்தச் சங்கிலியை அறுக்கும். புத்தரின் ‘சரியான பேச்சு’ என்ற போதனை இந்த நவீன டிஜிட்டல் யுகத்துக்கு மிகவும் அத்தியாவசியமானது.

ஒரு வார்த்தையைப் பேசுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர் அது உண்மையா, அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆராய்வது அனைவரினதும் பொறுப்பாகும்.

அதேபோன்று, கோபமும் பகையும் முதலில் சுட்டெரிப்பது நம்மைத்தான். சொல்லாலும், செயலாலும், எண்ணத்தாலும் பிறரைப் புண்படுத்தாமல் வாழும் ‘அஹிம்சை’யைப் பின்பற்றும் ஒரு சமூகத்தில் வன்முறைக்கு இடமிருக்காது.

புத்தர் கருணையைப் போதித்தார். இந்து சமயம் ‘அன்பே சிவம்’ என்கிறது, கிறிஸ்தவம் ‘உன் அயலானை உன்னைப் போல் நேசி’ என்கிறது, இஸ்லாம் இரக்கத்தையும் கருணையையும் போற்றுகின்றது. வழிபடும் முறைகளும் மொழிகளும் வேறாக இருக்கலாம்; ஆனால் எல்லா மதங்களும் இறுதியில் போதிப்பது அன்பை மட்டுமே.

அந்த அன்பின் ஒளியில் வடக்கு மாகாணம் என்றும் ஒன்றுபட்டு, அமைதியாக, மலர்ச்சியுடன் வளர வேண்டும் என்றார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக இவ்வாறான மிகப் பிரமாண்டமானதொரு வெசாக் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,