நோர்த் யார்க்கில் (North York) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6:54 மணியளவில் பிளாக் கிரீக் டிரைவ் மற்றும் லாரன்ஸ் அவென்யூ வெஸ்ட் (Black Creek Drive & Lawrence Avenue West) பகுதிக்கு காவல்துறை அழைக்கப்பட்டனர். விபத்தில் “பலருக்கு காயம்” ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அபாயகரமான, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருவர் அதிர்ச்சி விபத்து சிகிச்சை மையத்திற்கு (Trauma centre) கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் மூவர் சீரான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவ உதவியாளர்கள் (Paramedics) தெரிவித்தனர்.
இப்பகுதியில் பயணிப்பவர்கள் சாலை மூடல்களை எதிர்பார்க்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்