கனடா – மிசிசாகா கத்திக்குத்து மரணம்; சந்தேகநபருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கைதுக் கட்டளை

கனடாவின் மிசிசாகா நகரில் நபரொருவர் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் துல்லியமாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 19 ஆம் திகதி நண்பகல் 12:15 மணியளவில் ‘ஹுரொன்டாரியோ வீதி’ (Hurontario Street) மற்றும் ‘ஆக்னஸ் வீதி’ (Agnes Street) சந்திப்பிற்கு அருகில் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த அவசரத் தகவல்களையடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.

புலனாய்வாளர்களின் விபரங்களின்படி, சம்பவத்திற்கு முன்னர் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடம் (Parking lot) ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்ட நபருக்கும் சந்தேகநபருக்கும் இடையே கடுமையான கைகலப்பு (Physical altercation) ஏற்பட்டுள்ளது. இப் மோதலின் போதே பாதிக்கப்பட்ட நபர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இவ் விபரீதத்தில் உயிரிழந்தவர் மிசிசாகா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சே வில்சன் (Chay Wilson) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, நிலையான முகவரி எதுவும் அற்ற (No fixed address) 28 வயதுடைய ஜெரோம் எட்வர்ட்ஸ் (Jerome Edwards) என்ற சந்தேகநபருக்கு எதிராக, இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் (Second-degree murder) கீழ் தற்போது கனடா நாடு தழுவிய அளவிலான விசேட கைது கட்டளை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான எட்வர்ட்ஸ், நடுத்தர உடல்வாகு, குறுகிய கருப்பு தலைமுடி மற்றும் கருப்பு நிற முகத்தாடி (Goatree) கொண்ட ஒரு கருப்பினத்தவர் எனப் பொலிஸார் விபரித்துள்ளனர். அவர் கடைசியாக வெள்ளை நிற டி-சர்ட், கருப்பு நிற ஜிப்-ஸ்டைல் ஜாக்கெட், ஒளிரும் பச்சை நிற (Fluorescent green) காற்சட்டை, மஞ்சள் நிற டிம்பர்லேண்ட் ரக பூட்ஸ் காலணி மற்றும் வலது கையில் கருப்பு நிற கடிகாரம் ஆகியவற்றை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் பொதுவாக ‘ஹுரொன்டாரியோ வீதி’ மற்றும் ‘டண்டாஸ் வீதி’ ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வரக்கூடியவர் எனப் புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபரான எட்வர்ட்ஸ் உடனடியாக ஒரு சட்ட ஆலோசனையைப் (Legal counsel) பெற்றுக்கொண்டு, பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடையுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இந்தச் சந்தேகநபருக்குப் புகலிடம் அளிப்பவர்களோ அல்லது அவர் தப்பியோட உதவுபவர்களோ கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு (Criminal charges) முகங்கொடுக்க நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சந்தேகநபர் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் யாரும் அவரை நேரடியாக அணுக வேண்டாம் என்றும், அவரைக் கண்டால் உடனடியாக ‘911’ என்ற அவசர இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறும் பீல் பிராந்திய பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை