பௌத்த பிக்குவால் சிறுமி துஷ்பிரயோக வழக்கு: சந்தேகநபரான தேரருக்காக 20 சட்டத்தரணிகள்!

சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15.05.2026) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.

சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையானார்.

ஆனால் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு எந்த வெளி தரப்பினரும் முன்னிலையாகவில்லை.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நீதியை நிலைநாட்டும் பிரிவின் நீதித்துறை பிரதானியாக கடமையாற்றும் சஞ்ஜீவனி அபேகோனின் முயற்சியினாலே தேரருக்கு நீதமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதுவரை தேரருக்கு பிடியாணை கூட பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை.சட்டத்தரணி சஞ்ஜீவனி அபேகோன் தனது முகநூல் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.’

சட்டத்திற்கு மேல் மதம்-நீதியை விட பணம் முன்னிலையில்’ என்று பதிவிட்டிருந்தார்.இந்த சம்பவத்தில் அவ்வளவு அழுத்தம் நீதித்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளதையே இந்த குறிப்பு கோடிட்டு காட்டியுள்ளது.

அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன பல்லேகம ஹேமரத்ன தேரேரை 22ஆம் திகதியன்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் தனது இளம் வயது மகளை தகாத நடத்தைக்காக சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன பிக்குவிடம் தெரிந்தே ஒப்படைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை எந்தவொரு பிணை நிபந்தனைகளின் பேரிலும் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

சிறுமியின் தாயாரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்விவகாரத்தில் முதல் சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் கோட்டை நீதிபதி பாசன் அமரசேன பிறப்பித்த உத்தரவின்படி இம்மாதம் 22ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

12 நாள் வரை கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன தேரரை கோட்டை நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி அத்தனியார் மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது