தாயிடமிருந்து சேய்க்குப் பரவும் எச்.ஐ.வி, சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி நோய்கள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

யிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய மூன்று நோய்களும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் “3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மற்றும் அதன் இலக்குகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் வைத்திய நிபுணர் திலங்க ரூவான் பத்திரன, இலங்கையிலிருந்து இந்த 3 வகை நோய்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்கனவே எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஆகிய நோய்கள் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதனுடன் ‘ஹெபடைடிஸ் பி’ நோயையும் இணைத்து, மூன்று நோய்களையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவதே இந்த ‘3 வகை நோய்கள் ஒழிப்பு’ திட்டத்தின் நோக்கமாகும். அதற்கமைய, ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வழமையான எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகளுடன் மேலதிகமாக ‘ஹெபடைடிஸ் பி’ பரிசோதனையும் கட்டாயமாக முன்னெடுக்கப்படும். நாட்டில் ஹெபடைடிஸ் பி நோயின் தாக்கமானது 1 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனமும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையை இந்நோயைக் கட்டுப்படுத்திய நாடாக அங்கீகரித்துள்ளது. இருப்பினும், இதனை முழுமையாகக் கட்டுப்படுத்திய நாடாக மாறுவதே எமது இலக்கு. ஒரு கர்ப்பிணித் தாய்க்கு இந்நோய் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அவருக்கு முறையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலமும் பிறக்கும் குழந்தைக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 24 மணித்தியாலங்களுக்குள் ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசியை வழங்குவதன் மூலமும் குழந்தைக்கும் இந்நோய் பரவுவதைத் தடுத்து, ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும்.

ஆகையால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து, தரவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் இலங்கையை இந்த மூன்று நோய்களும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்திய நாடாக உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்களும் அரசாங்கத்தினால் இலவசமாக முன்னெடுக்கப்படும் இந்தப் பரிசோதனைகளுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.