சென்னை:
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது நிர்வாகக் குழுவின் முதல் முக்கிய நியமனங்களை அதிரடியாக மேற்கொண்டுள்ளார். முதல்வரின் முதன்மைச் செயலாளராக (தனிச் செயலாளர் 1) பி. செந்தில் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தனிச் செயலாளர் 2-வாக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதாரத் துறை செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட செந்தில் குமார், தற்போது உமாநாத் ஐஏஎஸ் வகித்து வந்த முதன்மைச் செயலாளர் பொறுப்பை ஏற்கிறார். ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிரியா, சண்முகம் ஐஏஎஸ்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா முடிந்த கையோடு, எமகண்ட நேரத்திற்கு முன்பாகவே (மதியம் 12 மணிக்குள்) தலைமைச் செயலகம் வந்தடைந்த முதல்வர் விஜய், கோட்டையில் உள்ள தனது அறையில் முறைப்படி இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கினார்.
அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழகச் சட்டசபை செயலாளர் சீனிவாசன் மற்றும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து முதல்வருக்கு வாழ்த்துப் பகிர்ந்தனர். புதிய நிர்வாகக் குழுவின் நியமனங்கள் மூலம், அரசு இயந்திரத்தை விரைவுபடுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
#SenthilKumarIAS #LakshmiPriyaIAS #VijayAsCM #TVK #BreakingNews #May10 #TamilNaduPolitics #FortStGeorge #SecretariatUpdate #IAS_Appointments #ThalapathyVijay #NewGovernmentTN #VijayInFort #AdministrationChange #StalinVsVijay #ElectionResults2026 #ChiefMinisterOffice #TamilNews #NewEraTN #VijayMakkalIyakkam_“`