இலங்கையின் உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பு – பிரதமர்

பல்கலைக்கழகங்களில் நிலவும் 3000க்கும் அதிகமான விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதுடன் கல்வி சாரா ஊழியர்கள் வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேநேரம் உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஆராய்ந்து வருகிறோம் என கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்னாக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோறாறியவர்கள் இம்முறை பல பாடங்களுக்கும் தோற்றிய மாணவர்கள் 2,81,810 பேர். இவர்களில் பல்கலைக்கழக பிரவேசத்துக்கான அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளவர்கள் 1, 76, 530 பேர் ஆவர்.

இவர்களில் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 937 பேர் ஆகும். 2025 – 2026 ஆண்டுக்காக இரண்டு புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 26 செப்டம்பர் முதல் வாரத்தில் மேற்படி பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

உயர்கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை மட்டும் வரைவு ஒன்றை தயாரிப்பதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அந்தக் குழு கடந்த ஆறு மாதங்களாக அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

உயர்கல்வி என்பது பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. அது அதனை விட விரிவானது. தொழில் கல்வியிலும் உயர் கல்வி அவசியமாவதால் இவை அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலேயே மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவானது தற்போது நடைமுறையில் உள்ள உயர்கல்வியில் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் தொடர்பிலேயே ஆராய்கின்றது. விரைவில் அந்த அறிக்கை பெற்றுக் கொள்ளப்படும்.

பொதுவான கல்வி மறு சீரமைப்பிற்கு இணைந்ததாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் அவர்கள் ஆராய்கின்றனர். அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய நாம் எதிர்காலத்தில் உயர்கல்வியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் திட்டங்களை மேற்கொள்வோம்.

ஏவ்வாறாயினும் மேற்படி குழுவின் அறிக்கை மற்றும் அதற்குப் பின்னரான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கேள்விக்கு ஏற்ப பாடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய பல்கலைக்கழக பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அவற்றுக்குத் தேவையான வசதிகள், ஆளணிகள் தொடர்பான திட்டமிடல் இடம் பெறவில்லை.

எனினும் தற்போது சிறந்த முறையில் அவற்றை முன்னெடுக்கும் வகையில் ஆளணிகளை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை கற்பித்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேலதிகமாக போதுமான ஆளணிகள் தேவைப்படுகின்றன.

இவை அனைத்தையும் ஆராய்ந்து கவனத்திற் கொண்டு நாம் மேற்படி குழுவின் மூலமே அதன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கு இணங்கவே நாம் ஆளணிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

2022 ஆம் ஆண்டு முதல் வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலை காணப்படுவதால் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு பல்கலைக்கழகங்கள் கோரும் எண்ணிக்கையை கவனத்திற் கொண்டு விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 3000 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அந்த வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கல்வி சாரா ஊழியர்கள் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக