அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முதலாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்கள் தொடர்பில் காலாண்டுக்கு ஒரு முறை கலந்துரையாடுவது வழமையானதாகும் எனவும், அந்த வகையில் நடப்பாண்டில் முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் மக்களை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட வாழ்வாதார, உட்கட்டுமான செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட அரசாங்க அதிபர், அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது பிரதேச செயலாளர்களுடன் சரியான தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் சரியான ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை பெற்று செயற்படுவதன் மூலம் மேன்மேலும் வினைத்திறனாக செயற்பட முடியும் எனவும், இவ் வருடம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களிற்காக 760 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், இதுவரை 212 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் செயற்பட்டுவரும்அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது நிறுவனங்களின் செயற்பாடுகள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதற்கான உரிய அறிவுறுத்தல்களையும் அரசாங்க அதிபர் வழங்கினார்.
மேலும் இக் கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி அரச சார்பற்ற, நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், பிரதேச செயலாளர்கள், திட்டங்களுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள்
XHMNWD52XI3N4U6HGGF7TXXYIY

சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

July 28, 2026

சிறுமி ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் (Sherwood Park) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது

757979515_893153420517649_5715581353310024185_n

ஒன்டாரியோ வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: 19 பேர் கைது, $97 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

July 28, 2026

ஒன்டாரியோவின் மிகப்பெரிய போதைப்பொருள் புலனாய்வு நடவடிக்கைகளில் ஒன்றை அடுத்து, கனடிய அதிகாரிகள் 19 பேரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், தெருக்களில்

CANADA PASSPORT

போலி கனடிய பாஸ்போர்ட் இணையதளத்தை நடத்திய யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு: பொலிஸார் தகவல்

July 28, 2026

னடிய அரசாங்கத்துடன் தொடர்புடையது போல் காட்டி, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு (Passport) இணையதளத்தை நடத்தியதாகக் கூறப்படும் யோர்க் பிராந்தியத்தைச் (York

7JFWSDPFKFG4ZDWVNCBNCHIKCY

வோட்டர்லூவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கடை மேலாளர் காயம் – பொலிஸார் தெரிவிப்பு

July 28, 2026

திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய

POLICE CANADA 111

ஹால்டன் பொலிஸார் தமது வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் முடிவுகளை வெளியிடவுள்ளனர்

July 28, 2026

ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

5XSONJLBFZCXDNCH5UVBLEETRQ

1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரட்டிப்பாகியுள்ளன. அதற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுவது இதோ.

July 28, 2026

கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம்

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்