சேலம்:
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரவீன்குமாருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் தவெக சார்பில் முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், விஜய் மன்றத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பிரவீன்குமாருக்குத் தவெக தனது ஆதரவை வழங்கியது.
நேற்று இரவு தேர்தல் பணிமனை அலுவலகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த பிரவீன்குமாரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் பின்தொடர்ந்து வந்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. “எடப்பாடி தொகுதிக்குள் வரக்கூடாது” எனக் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று மனு அளித்துள்ளனர். ஏற்கனவே வேட்பாளர் மாயமான விவகாரத்தில் பரபரப்பு நீடித்த எடப்பாடி தொகுதியில், தற்போது சுயேச்சை வேட்பாளருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் அரசியல் களத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
#TVK #ThalapathyVijay #EdappadiConstituency #SalemNews #SecurityRequest #ElectionViolence #BreakingNews #TNElection2026 #VijayFans #IndependentCandidate #PoliticalThreat #May3 #SalemSP #CountingDaySafety #TamilNaduPolitics #May4Counting #VoteForTV #VijayMakkalIyakkam #ElectionPanchayat #SafeCounting_“`