பொல்பிட்டிய பிராட்லண்ட்ஸ் நீர்த்தேக்க அணைக்கட்டுப் பாலத்தின் மீதிருந்து கெசல்கமு ஓயாவில் குதித்துக் காணாமல் போயிருந்த நபரின் சடலம், பொல்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
பல்லேவத்தை, பொல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என்பதும், அவர் வீட்டிலிருந்து ஓடிவந்து நீர்த்தேக்க அணைக்கட்டிலிருந்து ஆற்றில் குதித்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.