டீசல் ஊழல் என்று கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சில எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இந்த முறைப்பாட்டைச் செய்த பின்னர், டீசல் ஊழல் குறித்து அந்தந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய குடியரசு முன்னணி (United Republic Front) மற்றும் இன்னும் சில கட்சிகள் இணைந்து இந்த முறைப்பாட்டை வழங்கவுள்ளன