2026 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; தமிழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நேற்றையதினம்(24.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் சார்பில், கடந்த 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் 2026 மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் மீண்டும் ஒன்று கூட இருக்கின்றோம்.

இந்த நிகழ்வில் கட்சி, மதம், பிரதேசம் போன்ற குறுகிய மனப்பான்மைகளை கடந்து, ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்பமாக எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் சிரமதானப் பணிகளும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினத்திலே வடகிழக்கு சார்ந்து தேசிய சிந்தனையோடு இயங்குகின்ற சிவில் அமைப்புக்கள் மே 18 ஆம் நாள் பல்வேறு ஒத்துழைப்பை வழங்குகின்ற பிரதிநிதிகள், தாகசாந்திகளை முன்னெடுக்கின்றவர்கள் அனைவரையும் இந்த இடத்திலே அன்போடு அழைத்து நிற்கின்றோம்.

மேலும், வாரம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மூலம் இந்த நினைவேந்தலை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் அத்தனை தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்து, மே 18ஆம் நாளை தமிழ் இன அழிப்பு நாள் என உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டியதன் அவசியம் நமக்கு உள்ளது.

இந்நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதோடு, தமிழர்களின் தேசிய நலன்கள் மற்றும் அபிலாசைகளை மீண்டும் வலியுறுத்தும் தருணமாக இது அமைய வேண்டும். இந்த ஆண்டும் பல சமூகங்கள், குழுக்கள், அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் இந்த நினைவேந்தலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்புகிறேன் என்றார்.

canada police25

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்: ஒண்டாரியோ நபர் மீது கொலை முயற்சி வழக்கு

April 25, 2026

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள சம்மர்சைடு (Summerside) அருகே, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கியதாக

ha

ஆட்சேபனைகளால் ஹட்டன் நகர சபை அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்

April 25, 2026

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று(24.04.2026) நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் காலை 10.45 மணியளவில்

ne

சித்திரைப் புத்தாண்டு விழாவில் மோதல்: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

April 25, 2026

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்

sca

புதிய வகை டிஜிட்டல் மோசடி

April 25, 2026

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ

pakistan131

ஈரான்-, அமெரிக்கா-இரு தரப்பினரும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவார்களா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

April 25, 2026

இன்று (சனிக்கிழமை), அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்டக் குழுக்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளன. இருப்பினும்,

nee

ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

April 25, 2026

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று (25)

al

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணம்”

April 25, 2026

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணத்தை” (Walk for Peace) வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, பொதுமக்கள் ஒழுக்கத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென

679459844_122265181508059693_7584688422461219938_n

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதைசுட்டிக்காட்டினார்ஆளுநர்

April 25, 2026

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி

us

இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா – ஈரான்

April 25, 2026

அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ், ஈரான் சபாநாயகர் காலிபாஃப் இல்லாமல் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் ஈரானும் தயாராகியுள்ளன.

jai

விசேட சோதனை; 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது

April 25, 2026

பொலிஸாரால் நேற்றைய தினம் (24.04.2026) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

35e13887-0422-42bd-bb01-25462cbf699d

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான குழு

April 25, 2026

சுமார் 36 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, ஒரு பெரிய

spea

ஒலிபெருக்கி தொடர்பாக பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

April 25, 2026

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும்