வெனிசுவேலா ஜனாதிபதி கைது; முன்கூட்டியே கணித்து பந்தயம் கட்டிய படை வீரர் கைது

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம் ஈட்டிய அமெரிக்கச் விசேட படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் ‘ஃபோர்ட் பிராக்’ தளத்தில் பணியாற்றும் மாஸ்டர் சார்ஜென்ட் கேனன் கென் வான் டைக் என்பவர் மீது இந்தத் திருட்டு மற்றும் மோசடி முறைப்பாடு சுமத்தப்பட்டுள்ளது.

வெனிசுவேலா ஜனாதிபதியை இரகசியமாகத் தூக்கி வரும் ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ திட்டத்தில் வான் டைக் ஒரு முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

இந்தத் திட்டம் எப்போது நடக்கும் என்பது இவருக்கு முன்னரே தெரிந்திருந்தது. இதைப் பயன்படுத்தி, பாலிமார்க்கெட் என்ற இணையதளத்தில், “ஜனவரி மாதத்திற்குள் மதுரோ பதவியிலிருந்து நீக்கப்படுவார்” என 32,000 டொலர்களைப் பந்தயமாகக் கட்டினார்.

ஜனவரி மாதம் திட்டமிட்டபடி மதுரோ கைது செய்யப்பட்டார். இதனால் வான் டைக் கட்டிய பந்தயத்திற்கு 4,00,000 டொலர் பரிசு கிடைத்தது.

அனாமதேயமாக பந்தயத்தில் ஈடுபட்டாலும், இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் வென்றது சட்ட துறையினரின் கவனத்தை ஈர்த்தது. விசாரணையில், வான் டைக் தனது இலாபத்தை ஒரு வெளிநாட்டு கிரிப்டோகரன்சி கணக்கிற்கு மாற்றி, அங்கிருந்து தனது வங்கிக் கணக்கிற்குத் திசைதிருப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், மதுரோ கைது செய்யப்பட்ட சில மணித்தியாலங்களுக்கு பின்னர், வான் டைக் சீருடையில் ஆயுதங்களுடன் கப்பல் ஒன்றில் இருக்கும் புகைப்படம் ஆதாரமாகச் சிக்கியுள்ளது.

“நாட்டின் இரகசியங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், அதைத் தனது சுய இலாபத்திற்காகப் பயன்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்” என நியூயார்க் வழக்கறிஞர் ஜே கிளேட்டன் தெரிவித்துள்ளார். வான் டைக் மீது அரசு இரகசியங்களைத் திருடியது, முறையற்ற முறையில் பயன்படுத்தியது மற்றும் மோசடி உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்கப் படைகளால் காரகாஸிலிருந்து கடத்தி வரப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ, தற்போது நியூயோர்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன் மீதான போதைப்பொருள் கடத்தல் முறைப்பாடுகளை தான் நிரபராதி என வாதிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

benjamin neta

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புற்றுநோய் பாதிப்பு: உத்தியோகபூர்வ அறிவிப்பு

April 24, 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தமக்கு ஆரம்பக் கட்ட புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும்,

online danger

கனடியக் குழந்தைகளை இலக்கு வைக்கும் ‘764’ பயங்கரவாத வலையமைப்பு: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

April 24, 2026

கனடாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரை (Teens) இலக்கு வைத்து இயங்கும் ‘764’ (Seven-Sixty-Four) எனப்படும் பயங்கரவாத வலையமைப்பு

S6PAAQ5G6RCNNNSK2KPWYSK5MU

ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ்: வாஷிங்டனுக்கான கனடிய தூதர் பகிரங்க மன்னிப்பு

April 24, 2026

அமெரிக்காவிற்கான கனடிய தூதர் மார்க் வைஸ்மேன் (Mark Wiseman), நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ் அனுப்பியதற்காக உத்தியோகபூர்வமாக

FBRLYHUMXJDEVKW7KB4AGIYTXI

கனடா பி.சி. சட்டசபையில் ‘நாஜி முழக்கம்’: எம்.எல்.ஏ தாரா ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கண்டனம்

April 24, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாண சட்டசபையில், பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவாதத்தின் போது “இரத்தம் மற்றும் மண்”

nallu

சிவனொளிபாத மலைக்கான பாதயாத்திரை நல்லூரிலிருந்து ஆரம்பம்

April 24, 2026

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று

iran

இன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்?

April 24, 2026

மெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas

Saji

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

April 24, 2026

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி

toursim-2000x1125

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாரிய வீழ்ச்சி

April 24, 2026

மேற்காசியாவில் நிலவி வரும் போரினால், இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான

fa

சபாநாயகரைச் சந்தித்த பிரான்ஸ் செனட் தூதுக்குழு

April 24, 2026

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்

Arrest_1

தெஹிவளை டூ டோன் என்ற பாதாள உலக நபர் ஹெரோயினுடன் கைது

April 24, 2026

டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3

gov

பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

April 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த

nikka

வெனிசுவேலா ஜனாதிபதி கைது; முன்கூட்டியே கணித்து பந்தயம் கட்டிய படை வீரர் கைது

April 24, 2026

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம்