பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் மீது அண்மையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதில் உள்ள தகவல்களை ஏலத்திற்கு விட்டு பணம் பெறுவதற்கு அந்த தரப்பினர் முற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தாக்குதலினால் அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள மிகவும் முக்கியம் வாய்ந்த தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சில பொதுவான தகவல்கள் மாத்திரமே மற்றுமொரு தரப்பிற்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமையவே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவின் போது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாகவும் தமது நிறுவனம் தற்போது தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் எவ்வாறான முறையில் இடம்பெற்றது மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்துத் தமது நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும், சந்தேகநபர்களைக் கண்டறியும் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

au

அவுஸ்திரேலியாவில் ஒருவரைத் தாக்கிய இலங்கை இளைஞருக்கு சிறை!

July 29, 2026

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில், இலங்கை வம்சாவளியைச்

kand

மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள் – கந்தசாமி பிரபு

July 29, 2026

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாசாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அவர்களுக்கு எதிராகச்

su

சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

July 29, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து

Parl

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

July 29, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளதும், தற்போதைய ஜனாதிபதியின் பயன்பாட்டில் இல்லாததுமான பல ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறையின் முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகாலக்

XHMNWD52XI3N4U6HGGF7TXXYIY

சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

July 28, 2026

சிறுமி ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் (Sherwood Park) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது

757979515_893153420517649_5715581353310024185_n

ஒன்டாரியோ வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: 19 பேர் கைது, $97 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

July 28, 2026

ஒன்டாரியோவின் மிகப்பெரிய போதைப்பொருள் புலனாய்வு நடவடிக்கைகளில் ஒன்றை அடுத்து, கனடிய அதிகாரிகள் 19 பேரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், தெருக்களில்

CANADA PASSPORT

போலி கனடிய பாஸ்போர்ட் இணையதளத்தை நடத்திய யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு: பொலிஸார் தகவல்

July 28, 2026

னடிய அரசாங்கத்துடன் தொடர்புடையது போல் காட்டி, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு (Passport) இணையதளத்தை நடத்தியதாகக் கூறப்படும் யோர்க் பிராந்தியத்தைச் (York

7JFWSDPFKFG4ZDWVNCBNCHIKCY

வோட்டர்லூவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கடை மேலாளர் காயம் – பொலிஸார் தெரிவிப்பு

July 28, 2026

திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய

POLICE CANADA 111

ஹால்டன் பொலிஸார் தமது வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் முடிவுகளை வெளியிடவுள்ளனர்

July 28, 2026

ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

5XSONJLBFZCXDNCH5UVBLEETRQ

1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரட்டிப்பாகியுள்ளன. அதற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுவது இதோ.

July 28, 2026

கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம்

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு