8 மாத கர்ப்பிணி வேட்பாளர் மீது கல்வீச்சு: பாபநாசம் தொகுதியில் திமுக – நாதக மோதலால் பதற்றம்!

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 8 மாத கர்ப்பிணி வேட்பாளர் அனிஷ் பாத்திமா மீது திமுகவினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அம்மாபேட்டை அருகே உக்கடை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியை வேட்பாளர் அனிஷ் பாத்திமா பார்வையிடச் சென்றார். அப்போது, வாக்குச்சாவடிக்குள் திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில் அங்கிருந்தவர்கள் அனிஷ் பாத்திமாவை கீழே தள்ளிவிட்டு, செங்கற்களால் தாக்கியதாக அவரது கணவர் ஷேக் அம்சத்அலி குற்றம் சாட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து மயக்கமடைந்த அனிஷ் பாத்திமா, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை தரப்பில், “48 மணி நேரம் கழித்தே வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துத் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தஞ்சை வேட்பாளர் கிருஷ்ணகுமார் எச்சரித்துள்ளார்.

#Papanasam #NTK #AnishFathima #Seeman #ThanjavurPolitics #DMKAttack #ViolenceInPolls #TNElection2026 #BreakingNews #PregnantCandidate #PapanasamConstituency #TamilPolitics #JusticeForAnishFathima #PoliceInvestigation #ThanjavurNews #Election2026 #DemocraticDuty #HumanityFirst #NaamTamilarKatchi #UkkadaiIncident

Dept-Registrations

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 24, 2026

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் (DRP) உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி

kasal

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

April 24, 2026

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும்

he

இலங்கை – ஐ.நா. ஹெயிட்டி அமைதிப் படை நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

April 24, 2026

கரிபியன் நாடான ஹெயிட்டி வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘குழு மோதல் தடுப்புப் படை’ பிரிவில் இலங்கை இராணுவத்தினரை இணைப்பது தொடர்பில்

cyb

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்

April 24, 2026

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக

kada

கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’

April 24, 2026

கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை,

Johnston-Fernando-1

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை: 4 மாதங்களின் பின்னர் விடுதலை

April 24, 2026

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

arres

இரு வௌிநாட்டவர்கள் சீன சிகரட்டுக்களுடன் கைது

April 24, 2026

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச்

d

நெடுந்தீவில் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

April 24, 2026

நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பான கவனயீர்புப் போராட்டம் இன்று (24) காலை

Ranil-Maithree-Wickremesinghe

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் சி.ஐ.டி விசாரணை

April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் தற்போது வாக்குமூலம்

677645448_1488683789323536_3985465687936002925_n

காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் சமூக அமைப்புகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உடனான கலந்தாய்வு

April 24, 2026

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டான்மைகளை ஏற்படுத்துவதற்கு

newindianexpress_2025-04-10_hb1r8dyb_Ramadoss-demotes

பரங்கிப்பேட்டை பாமக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்: ராமதாஸ் தரப்பு கடும் கண்டனம் – குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்!

April 24, 2026

சென்னை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் கபியரசு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பாமக தலைமை

dailythanthi_2026-04-24_w8wfgmvg_CHENNAI-10

“பானை” சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி: பண்ருட்டியில் அதிரடி கைது!

April 24, 2026

கடலூர், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்களித்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட