தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு ஆலயத்தில் விசேட அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. இந்த வழிபாடுகளை ஆலயப் பூசகர் மதிமுக ராசா தலைமை தாங்கி நடத்தினார்.
இந்தப் புத்தாண்டு வழிபாடுகளில் பொதுமக்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.
இலங்கையின் பல பாகங்களிலும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபகாலமாகப் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த வெடுக்குநாரிமலை ஆலயத்திலும் எவ்விதத் தடையுமின்றி அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.