டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை காலை ஈரானுக்குப் புதிய அச்சுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள முற்றுகைக்கு அருகே வரும் எந்தவொரு ஈரானிய கப்பலையும் அமெரிக்கா மூழ்கடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கடற்படை “முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக” உரிமை கோரிய டிரம்ப், அதே சமயம் அமெரிக்கா இன்னும் அவர்களின் “வேகப்படைத் தாக்குதல் கப்பல்களை” (Fast attack ships) மூழ்கடிக்கவில்லை என்று கூறினார். ஒருவேளை அவை முற்றுகைக்கு அருகில் வந்தால், போதைப்பொருள் கடத்தல் படகுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அதே உத்திகளை அமெரிக்கக் கடற்படை கையாளும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தக் கப்பல்கள் எவையாவது எங்களது முற்றுகைக்கு (BLOCKADE) மிக அருகில் வந்தால், கடலில் படகுகளில் வரும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நாங்கள் பயன்படுத்தும் அதே அழிப்பு முறையைப் பயன்படுத்தி அவை உடனடியாக அழிக்கப்படும் (ELIMINATED). இது மிக விரைவானது மற்றும் கொடூரமானது,” என்று அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.