ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே உயிர் அச்சுறுத்தல் – கிளிநொச்சி ஊடக அமையம்

பொதுப்படையான விழிப்புணர்வை ஏற்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே என தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம் இதனை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு தனிநபரையும் பெயரிட்டுக் குறிப்பிடாமல், சமூக நலன் கருதி பதிவிட்ட கருத்துக்காக ஓர் ஊடகவியலாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதானது, சுயாதீன ஊடக சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். இது ஒட்டுமொத்த ஊடகச் சமூகத்தையும் அச்சமூட்டி மௌனிக்கச் செய்யும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.இவ் அச்சுறுத்தல் மூலம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதே சம்மந்தப்பட்டவர்களின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.

மேலும் இந்த கொலை மிரட்டல் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும், அச்சுறுத்தல் விடுத்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது காவல்துறையினர் காட்டும் மெத்தனப்போக்கும் இந்த விடயத்தை சாதாரன ஒரு அச்சுறுத்தலாக மாற்றியிருப்பது எமக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. குற்றவாளிகளுக்குத் துணைபோகும் வகையிலான இத்தகையச் செயல்பாடுகள், சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதுடன், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. காவல்துறையின் இச் செயற்பாடு ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபரை எவ்வித பின்னணி செல்வாக்குகளுக்கும் இடமளிக்காது உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய முழுப் பொறுப்பும் காவல்துறையினரையே சாரும்.

இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் ஊடகவியலாளர்களின் பேனா முனைகளை ஒடுக்கிவிட முடியாது. உண்மையை உரக்கச் சொல்லும் எமது பயணத்தில் இத்தகைய மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையின் சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படவேண்டும். எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pac

அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய பயங்கரவாத பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான்!

March 23, 2026

அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள “உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு” பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சிட்னியில் இயங்கும் சர்வதேச பொருளாதாரம் மற்றும்

kad

பாலகமுனை கடற்பரப்பில் கடல் அட்டைகளுடன் மூவர் கைது

March 23, 2026

மன்னார், பாலகமுனை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை

au

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்- ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சந்திப்பு

March 23, 2026

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை

ea

கிழக்குப் பல்கலையின் கலை கலாசார பீட புதிய பீடாதிபதியாக பேராசிரியர் சுரேஸ்!

March 23, 2026

ழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் க. சுரேஸ் திங்கட்கிழமை (23) அன்று நடந்த பீடாதிபதி

Gemunu wi

வழமைக்கு திரும்புகின்றன தனியார் பேருந்து சேவைகள்

March 23, 2026

அதிகரிக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை (24)

jail

கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காடு கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : இதுவரை ஐவர் கைது!

March 23, 2026

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, அதே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம்

Air Canada_4

விபத்துக்குள்ளான ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இரு விமானிகள் உயிரிழப்பு: பயணிகள் சிலர் கவலைக்கிடம்!

March 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23.03. 2026) அதிகாலை ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம்

DRO

ஆட்கள் பதிவுத் துறை முக்கிய அறிவிப்பு

March 23, 2026

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆட்கள் பதிவுத் துறையின் தலைமை அலுவலகம்

ddda

தனியார் நிலத்தில் காட்டுத் தீ

March 23, 2026

மலையகத்தில் தொடரும் வறட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது. இதன்படி அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப்

sw

சுவிஸ் வாழ் 3 இலங்கையர்கள் இஸ்தான்புல் வீதி விபத்தில் பலி!

March 23, 2026

இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம்

tru

பதற்ற நிலையில் திடீர்த் திருப்பம்: ஈரான் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு

March 23, 2026

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைக்கு இடையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

shiyamali

இலங்கையில் போதுமான அளவு விவசாய உற்பத்திகள் கையிருப்பில் உள்ளன!

March 23, 2026

வரவிருக்கும் பருவத்திற்குத் தேவையான விதைகள் விவசாயத் திணைக்களத்தில் உள்ளன. அடுத்த போகத்திற்குத் தேவையான விதை , நெல் பசளை வகைகள்