சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் வலி. வடக்கு மக்கள்

சித்தரை புத்தாண்டு தினத்தன்று பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் , அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில் , குறித்த பாதையை நிரந்தர பாதையாக்கும் நோக்குடன் இராணுவத்தினர் பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் , வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள போதிலும் , பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும் , பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில் , அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி , தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது , நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும் , அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்!

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்