மும்பையில் அர்ஜென்டின கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி…

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்தார் மெஸ்ஸி. விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாஜ் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 4:00 மணியளவில் கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (சி.சி.ஐ.,) அமைந்துள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ‘கோட் கப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

உற்சாக வரவேற்பு:மாலை 5:00 மணிக்கு வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக மெஸ்ஸியை வரவேற்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

சச்சினுடன் சந்திப்பு: இந்திய கால்பந்து வீரர் சுனில் செத்ரி, முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கண்காட்சி கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் முடிவில் இரு அணியினருக்கும் வாழ்த்து தெரிவித்த மெஸ்ஸி, சுனில் செத்ரியை கட்டித்தழுவினார். பின் மைதானத்தை வலம் வந்த மெஸ்ஸி, கேலரியை நோக்கி பந்தை உதைத்து, ரசிகர்களுக்கு பரிசு வழங்கினார். மைதானத்தில் இருந்த இளம் வீராங்கனைகளுடன் கால்பந்து விளையாடினார் மெஸ்ஸி. பின் சச்சின், மெஸ்ஸி, சாரஸ் சந்தித்துக் கொண்டனர். அப்போது சச்சின், தனது ஜெர்சியை மெஸ்ஸிக்கு வழங்கினார்.

‘பேஷன் ஷோ’: இரவு 7:00 மணிக்கு மேல், தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட தனியார் ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். முடிவில், 2022ல் கத்தாரில் நடந்த ‘பிபா’ உலக கோப்பையில் மெஸ்ஸி பயன்படுத்திய ஜெர்சி உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜாக்கி ஷெராப், ஜான் ஆப்ரஹாம், கரீனா கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்