மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிக இடமளிக்கப்பட மாட்டாது – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 டிசம்பர் 09ஆம் திகதி கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

கொழும்பு மாவட்டம் வெள்ள நிலைமையால் இவ்வளவு தூரம் ஆபத்துக்குள்ளாகியிருப்பதற்கு, எந்தவொரு திட்டமிடலோ அல்லது சட்டதிட்டங்கள் குறித்த தெளிவோ இன்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே காரணமாகும். மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாகவே மாவட்டமும் மக்களும் இந்த ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளி நிலைமையால் அதிகளவான உயிர் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்ட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஏற்பட்ட சேதம் குறைவாக இருந்த போதிலும், எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட தலையீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் விசேடமாக விவாதிக்கப்பட்டது. வருடாந்தம் ஏற்படும் வெள்ளம் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க இயலாது. அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுத் திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்படத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் படுத்த வேண்டும்.

கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏதேனும் தீர்வை வழங்குவது தொடர்பில் நாம் இப்போதே கலந்துரையாடி வருகிறோம் என்றும், ஊடகங்களிடம் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான அருண பனாகொட, சந்தன சூரியஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

canada export

டிரம்ப் – கனடா வர்த்தக மோதல் தீவிரமடைதல்: உலகளாவிய தாக்கம்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள வர்த்தக மோதல், வட அமெரிக்க

P_4790484658

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகம் முழுவதும் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்!

August 26, 2026

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகைப் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்

maalai-malar_2026-08-26_djl2qd6s_vijay

“அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்!” – உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் விஜய் ஓணம் வாழ்த்து!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் ஓணம் நல்வாழ்த்து கேரள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித்

25kdl2507_2508chn_105_7

வேளாங்கண்ணிக்கு 28-வது ஆண்டாகப் பாதயாத்திரை: புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்!

August 26, 2026

கடலூர்: வேளாங்கண்ணி திருவிழாவும் பாதயாத்திரையும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம்

image-2026-05-9a03504cef34fd9ce0dfa482a9177be9-1200x675

தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய விமான நிலையங்கள்: த.வெ.க. அரசின் தொலைநோக்குத் திட்டங்கள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதோடு, ஓசூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை

1200-675-19042348-thumbnail-16x9-che3

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்: தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும் ‘வெற்றி பயணம்’ திட்டம் – முழு விவரம்!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் புதிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றி

images - 2026-08-26T103751.144

தமிழகத்தில் காணாமல் போன மலைகள்: சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் பிரபு பகீர் தகவல்!

August 26, 2026

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரபு, தமிழகத்தில் வெட்டி எடுக்கப்பட்டு

26-6a07204f6669e

“லாட்டரி விவகாரத்தில் என் கணவரைத் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்!” – எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கண்டனம்

August 26, 2026

சென்னை: சட்டப்பேரவையில் லாட்டரி விவாதம் சட்டப்பேரவையில் நேற்று இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகள்

4-122Nle5O6fKwN9

ரூ.100 கோடியில் சிப்காட் பூங்காக்கள் மேம்பாடு: சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் முக்கிய அறிவிப்புகள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகளுக்கான

14-Seeman-Bharathiraja

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம்: தமிழக அரசுக்கு சீமான் நெஞ்சார்ந்த நன்றி!

August 26, 2026

சென்னை: அரசின் முக்கிய அறிவிப்பு மறைந்த மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் அவருக்கு திருவுருவச் சிலையுடன்

Tamil_News_lrg_4286539

விவசாயிகள் போராட்டத்தில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

August 26, 2026

சென்னை: தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை விவசாயிகள் போராட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக, தி.மு.க. எம்.எல்.ஏ.வும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி

dailythanthi_import_h-upload_2025_06_04_43951807-chennai-07

பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!

August 26, 2026

சென்னை: வெளிப்படைத்தன்மை இல்லை பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தி.மு.க. வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்