யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் நேற்று 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களையும், அளிக்கைகளையும் மதிப்பீடு செய்து தனித்தனியாகப் புள்ளிகளை வழங்கினர்.

பீடாதிபதி தெரிவு குறித்து உள்வாரிப் பேரவை உறுப்பினர் ஒருவரால் சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட பீடாதிபதி ஒருவர் மதிப்பீட்டில் கலந்து கொள்ளவில்லை.

உள்வாரி உறுப்பினர்களாக இருந்த போதிலும், துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்ததனால் நான்கு பீடாதிபதிகளும் இம்மதிப்பீட்டில் பங்குகொள்ளவில்லை. இதனால் வெளிவாரி உறுப்பினர்களின் செல்வாக்கே மதிப்பீட்டில் அதிகமாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி முதல் நிலையையும், விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான கு.மிகுந்தன், மருத்துவ பீடாதிபதியும், பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி – ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணைவேந்தராக நியமனம் செய்வார்.

tamil-nadu-people-welcome-vijay-as-their-chief-minister-says-tvk-mla-maria-wilson-1200x900 (2)

“தனுஷ் விஜய்க்கு போட்டியா?” – அமைச்சர் மரிய வில்சன் பதில்!

October 24, 2026

சென்னை: நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு அரசியலில் அவர் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு

3

“உதகையில் மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து – ஓட்டுநர் உயிரிழப்பு!” – இன்று முதல் இரவு நேரப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள்!

October 24, 2026

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிபயங்கர கனமழை காரணமாக உதகை மலைப்பாதையில் பல இடங்களில் மிகக் கடுமையான

2

“தனுஷ் கட்சி ஆரம்பிக்கலாம்… ஆனால் மக்களுக்காக வாழ வேண்டும்!” – இயக்குனர் பேரரசு!

October 24, 2026

சென்னை: செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசுவிடம், நடிகர் தனுஷ் புதிதாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்துக் கேள்வி

is

கடற்கரைப் பகுதியில் 475 kgக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின்

October 24, 2026

மாத்தறை, தலல்ல, நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இன்று (24) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475

images (1)

“கண்ணாடி மாளிகையில் இருந்து கற்கோட்டையை நோக்கி கல் எறிவதுபோல் உள்ளது உங்கள் கதை!” – சேகர்பாபு விமர்சனம்!

October 24, 2026

சென்னை: கண்ணாடி மாளிகையில் இருந்து கற்கோட்டையை நோக்கி கல் எறிவதுபோல் தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகள் உள்ளதாக முன்னாள் இந்து

usa canada

சில கனடியப் பொருட்கள் மீதான 50% வரியை நீக்குகிறார் ட்ரம்ப்; நமக்குத் தெரிந்தவை என்ன?

October 24, 2026

வெள்ளை மாளிகை கனடியப் பொருட்கள் மீதான தனது வரி விதிப்பில் (tariff regime) மீண்டும் ஒரு பரந்த அளவிலான மாற்றங்களைச்

ac

இணுவில் சந்தியில் வீதி விபத்து – 67 வயதுடைய முதியவர் உயிரிழப்பு!

October 24, 2026

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, இணுவில் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே

ss

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை!

October 24, 2026

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில்

Rain

வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மழை அதிகரிக்கக்கூடும் எச்சரிக்கை!

October 24, 2026

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (24)

dailythanthi_2026-10-23_jo8jm3xc_Untitled-1 - Copy

“நாகூர் தர்காவுக்கு 45 கிலோ விலையில்லா சந்தன கட்டைகள்!” – முதல்-அமைச்சர் விஜய் அரசாணை வழங்கினார்!

October 23, 2026

சென்னை: கந்தூரி விழா: நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய ஆண்டவர் கந்தூரி விழா வெகு விமரிசையாக

harry meghan

பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம்” – தந்தை மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹரியின் மனைவி மேகன் கருத்து!

October 23, 2026

பிலிப்பைன்ஸிலுள்ள தனது தந்தையின் முன்னாள் வீட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்துத் தாம் شدید

trump june 26

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியம்: ஆனால் அனைத்து அதிகாரங்களும் எம்மிடமே உள்ளன – டொனால்ட் டிரம்ப்!

October 23, 2026

. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் நிலை நெருங்கியுள்ள போதிலும், பேச்சுவார்த்தைகளில் அனைத்து அதிகாரங்களும் (Cards) அமெரிக்காவின்